குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் தான் அதிகளவில் போதைப்பொருள் கடத்தல் நடைபெறுகிறது என்றும் துறைமுகங்கள் தனியார்மயமாக்கியதன் மூலம் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளது என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் தான் அதிகளவில் போதைப்பொருள் கடத்தல் நடைபெறுகிறது என்றும் துறைமுகங்கள் தனியார்மயமாக்கியதன் மூலம் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளது என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, நாட்டில் நிலவும் போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க மத்திய அரசு இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் கூறினார். மேலும் பேசிய அவர், முந்த்ரா மற்றும் விஜயவாடா துறைமுகங்களில் தான் அதிகளவில் போதைப்பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க:பிற்படுத்தப்பட்டோர்க்கு 5 ஆண்டாக உயராத கிரீமிலேயர், 15 லட்சமாக உயர்த்துக.. மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை.
இந்தியாவிலே குஜராத்தில் தான் போதை பொருள் விற்பனை அதிகளவில் இருப்பதாக தெரிவித்த அமைச்சர், அங்குள்ள துறைமுகம் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டிருப்பதால் தான் இதுபோன்று நடைபெறுவதாக குற்றச்சாட்டினார். துறைமுகங்கள் மூலமாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் போதைப் பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக கூறினார்.
ஆனால் தமிழத்தில் போதைப் பொருட்களை அழிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தமிழகத்தில் விஜயவாடா துறைமுகத்தில் இருந்து தான் அதிகளவில் போதைப்பொருள்கள் வருவதாக அவர் குற்றச்சாட்டினார். மேலும் துறைமுகங்களை தனியார்மயமாக்கியதன் விளைவாக போதைப்பொருள்கள் கடத்தல் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். எனவே துறைமுகங்களை தனியாருக்கு விடாமல் அரசே நடத்த வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் படிக்க:முழுசா எதிர்க் கட்சியா உருவெடுத்த பாஜக.. கமலாலயத்தில் அலைமோத போகுது கூட்டம்.. அண்ணாமலை செம்ம பிளான்.