திமுக அமைச்சருக்கு திடீர் உடல்நலக்குறைவு.. அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.!

Published : Oct 15, 2021, 08:15 AM ISTUpdated : Oct 15, 2021, 08:17 AM IST
திமுக அமைச்சருக்கு திடீர் உடல்நலக்குறைவு.. அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.!

சுருக்கம்

தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு நேற்று மாலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.பன்னீர்செல்வத்துக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு நேற்று மாலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில் இதய அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

எனினும் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டார தரப்பில் கூறப்படுகிறது. திமுகவில் கருணாநிதி அமைச்சரவையில் அமைச்சராக இடம்பெற்றிருந்த எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்துக்கு மீண்டும் அமைச்சர் பொறுப்பை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!