திமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ்..? அமைச்சர் பதிலால் அதிர்ச்சியில் அதிமுக

By Ajmal Khan  |  First Published Jul 12, 2022, 8:37 AM IST

ஒற்றை தலைமை விவகாரத்தில் அதிமுகவில் இருந்து  ஓபிஎஸ் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், திமுகவில் இணைந்தால் ஏற்றுக்கொள்வீர்களா? என்ற கேள்விக்கு வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி பதிலளித்துள்ளார்.
 


அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்

ஒற்றை தலைமை விவகாரம அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நேற்று பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் நடைபெற்ற நேரத்தில் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களோடு அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்றினார். அப்போது அதிமுக தலைமை அலுவலுக கதவுகளை உடைத்து உள்ளே சென்றனர். இந்த சம்பவத்தின் போது ஓபிஎஸ்- இபிஎஸ் ஆதரவாளர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஏராளமான கார்கள், பைக்குகள், பேருந்துகள் சேதம் அடைந்தது. இந்த சம்பவம் இபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில் பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து அதன் மூலம் ஓபிஎஸ், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகரன் உள்ளிட்டவர்களை நீக்கப்பட்டனர். இதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி, மற்றும் கே.பி.முனுசாமி ஆகியோரை நீக்கி ஓபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டார். இந்த சம்பவம் அதிமுக தொண்டர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. 

Tap to resize

Latest Videos

அதிமுக அலுவலகத்தில் என்ன நடந்தது.? அலுவலகம் யாருக்கு சொந்தம்.? ஓபிஎஸ்-இபிஎஸ்ஸுக்கு வருவாய்த் துறை நோட்டீஸ்!

தென் மாவட்டங்களில் அதிமுக பாதிப்பு

ஏற்கனவே அதிமுகவில் இருந்து சசிகலா விலகிய நிலையில், தென் மாவட்டங்களை பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது.  இந்தநிலையில் தற்போது மீண்டும் ஒரு பிளவாக ஓபிஎஸ்யை கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சம்பவம் அதிமுக தொண்டர்களை கவலை அடையவைத்துள்ளது. அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டதால் அவரது சமுதாயத்தை சேர்ந்த மக்கள் அதிமுகவினருக்கு எதிராக திரும்ப கூடும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டதால் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தநிலையில் ஓபிஎஸ் திமுகவில் இணைய வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி பதில் அளித்துள்ளார்.  மதுரையில் வரும் 23ம் தேதி திமுக மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.  கலைஞர் திடல் பகுதியில் பந்தல் அமைக்கும் பணியினை  வணிகவரித்துறை அமைச்சர் பி. மூர்த்தி துவக்கிவைத்து பார்வையிட்டார். 

அதிமுக அலுவலகத்தில் கும்மாளம் போட்ட குடிகாரர்கள்.. ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் திடுக் தகவல்!

திமுகவில் ஓபிஎஸ்

இதனை தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மூர்த்தியிடம், அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்ட நிலையில், திமுகவிற்கு வந்தால் இணைத்து கொள்வீர்களா என கேள்வி எழுப்பினார். இந்த கேள்வியால் அதிர்ச்சி அடைந்த மூர்த்தி, இப்ப வரைக்கும் நல்லா தானே கேள்வி கேட்ட... என செய்தியாளரை பார்த்து பதில் கேள்வி எழுப்பிய மூர்த்தி, அதையெல்லாம் முதலமைச்சர் பார்த்துக் கொள்வார் என்றும், திமுகவுக்கு வருவது என்பது அவர்களது சொந்த விருப்பம், திமுகவை பொறுத்தவரை மற்ற கட்சியிலிருந்து யார் வந்தாலும் அவர்களை அரவணைப்பதற்கு முதலமைச்சர் எப்போது தயாராக இருக்கிறார்கள், யார் எந்த கட்சியில் இருந்து வந்தாலும் திமுகவில் இணைத்துக் கொள்வோம் என கூறினார்.

இதையும் படியுங்கள்

பினாமி சொத்துக்களை முடக்கியது செல்லும்.. சசிகலா தலையில் இடியை இறக்கிய சென்னை உயர்நீதிமன்றம்..!

click me!