ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலை மனம் போன போக்கில் பாஜகவை தேர்வு செய்துள்ளதாகவும், நாங்கள் எல்லாம் கொள்கை, லட்சியத்திற்காகவும் திமுகவில் இணைந்து பயணித்து வருகிறோம் எனவும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டர் தர்காவில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சிமஸ்தான் சந்தனம் பூசும் வைபவத்தில் கலந்துகொண்டு, ஆண்டவரை தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் ஆயிரம் பேருக்கு பிரியாணி பொட்டலங்களை அன்னதானமாக வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது.
உற்சாகம் ததும்பும் தம்பி திருமகனின் முகம் மனதில் நீங்காமல் நிற்கிறது - முதல்வர் இரங்கல்
அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற திராவிட மாடல் ஆட்சியை செய்து வருகிறார். முக்கியமாக பள்ளிவாசல், தேவாலயங்கள் சீரமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதுதொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் சிறுபான்மை மக்களின் நலன் காக்கும் அரசாக திமுக தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.
பள்ளி, கல்லூரியில் நான் ஜஸ்ட் பாஸ் தான்.... அதற்கு கலைஞர் தான் காரணம் - உதயநிதி ஓபன் டால்க்
சிறுபான்மை மக்களுக்கு திமுக தலைமையிலான அரசில்தான் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலை மனம் போன போக்கில் பாஜகவை தேர்வு செய்துள்ளார். நாங்கள் அனைவரும் கொள்கை, லட்சியத்திற்காக திமுகவில் இணைந்து பயணித்து வருகிறோம்.
பாஜவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி காயத்திரி ரகுராம் வெளியே சென்றுள்ளது குறித்து பிரதமரிடம்தான் கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.