விலகுபவர்கள் யாரும் என்னை புகழ்ந்து விட்டு செல்ல வேண்டும் என கட்டாயம் இல்லை- அண்ணாமலை ஆவேசம்

By Ajmal Khan  |  First Published Jan 4, 2023, 2:00 PM IST

அண்ணாமலை தலைமையில் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென காயத்திரி ரகுராம் கூறியநிலையில், விலகுபவர்கள் யாரும் என்னை புகழ்ந்து விட்டு செல்ல வேண்டும் என கட்டாயம் இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


எதிர்த்தால் தான் நல்லது

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  இந்தியாவிலேயே அதிகம் கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் மாறி உள்ளதாக தெரிவித்தார்.  ஒவ்வொரு நபர் தலையிலும்  2 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் கடன் உள்ளது என தெரிவித்தார். பொதுமக்கள் அனைவரிடமும் ஆதார் கார்டு இருக்கும் போது மக்கள் ஐடி வைத்து புதிதாக என்ன செய்யப் போகிறார்கள் என கேள்வி எழுப்பினார்.  ஆதார் கார்டு தன்னுடைய வேலையை சிறப்பாக செய்யும்பொழுது மக்கள் ஐடி எதற்கு என்பதை அரசு செயலர் விளக்க வேண்டும் என தெரிவித்தார்.  பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென காயத்திரி ரகுராம் கூறியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், கட்சியில் தன்னை எதிர்த்து 10 பேர் இருப்பது நல்லது தான் அப்பதான் கட்சி வளர்கிறது என அர்த்தம் என குறிப்பிட்டார்.

Tap to resize

Latest Videos

கட்சியில் உள்ள பெண்களைப் பற்றி மோசமாகப் பேசுகிறார்… அண்ணாமலை மீது காயத்ரி ரகுராம் குற்றம்சாட்டு!!

வாழ்த்தி வழி அனுப்புகிறோம்

கட்சியிலிருந்து வெளியே செல்வோரை வாழ்த்தி வழி அனுப்புகிறோம்; என்னை பற்றி எந்த விமர்சனமாக இருந்தாலும் என்னுடைய பதில் மவுனம் தான் எற கூறினார். திமுகவைப்போல் கட்சியில் வாழ்க கோஷம் போட்டுக்கொண்டு அடிமையாக இருக்க முடியாது. பாஜக ஒரு ஜனநாயக கட்சி, கட்சியில் 10 பேர் என்னை விமர்சித்தால் அது நல்லதுதான் என தெரிவித்தார். பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் தாமதமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கான காரணத்தை காவல்துறை தெரிவிக்க வேண்டும். பாஜகவின் அழுத்தத்தின் காரணமாகவே திமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.  ஜாதி இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்ற திமுகவின் ஆட்சிக்கு புதுக்கோட்டை இறையூர் கிராமத்தில் நடக்கும் சம்பவங்களை சாட்சி என தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

ஈவிகேஎஸ் இளங்கோவன் மகனும் சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈவேரா திடீர் மரணம்- காங்கிரஸ் நிர்வாகிகள் அதிர்ச்சி

click me!