ஈவிகேஎஸ் இளங்கோவன் மகனும் சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈவேரா திடீர் மரணம்- காங்கிரஸ் நிர்வாகிகள் அதிர்ச்சி

By Ajmal Khan  |  First Published Jan 4, 2023, 1:43 PM IST

முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ். இளங்கோவன் அவர்களின் மகனும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ வான திருமகன் ஈவேரா,  ஈரோடு கே எம் சி ஹெச் மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார்.


ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவும், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வே.கே.எஸ் இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈ.வெ.ரா காலமானார்..உடல்நலக் குறைவு  ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். திடீர் மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக இன்று காலை மரணமடைந்துள்ளார்.  திருமகன் ஈவேராவிற்கு  மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். திருமகன் திடீர் உயிரிழப்பு காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நேற்று இரவு ஈரோட்டில் உள்ள இல்லத்தில் தனது அறையில் தூங்குவதற்காக திருமகன் ஈவேரா சென்றுள்ளார். இன்று காலை நீண்ட நேரமாக அறை கதவு திறக்கப்படாத காரணத்தால் உ்ள்ளே சென்று அவரது உறவினர்கள் பார்த்துள்ளனர். அப்போது திருமகன் ஈவேரா சுய நினைவின்றி கிடந்துள்ளார். இதனையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு திருமகன் ஈவேராவை கொண்டு சென்ற நிலையில் மருத்துவர்கள் அவரை பரிசோதித்து விட்டு ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்

முதல் தேர்தலிலேயே வெற்றியை ருசித்த திருமகன் ஈ.வெ.ரா.

click me!