அமைச்சர் செஞ்சி மஸ்தானின் சகோதரர் பதவி பறிப்பு .. பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிரடி..!

By vinoth kumar  |  First Published May 26, 2023, 11:06 AM IST

செஞ்சி பேரூர் திமுக செயலாளர் காஜா நஜீரை அப்பொறுப்பில் இருந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிரடி நீக்கியுள்ளார். 
 


செஞ்சி பேரூர் திமுக செயலாளர் காஜா நஜீரை அப்பொறுப்பில் இருந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிரடி நீக்கியுள்ளார். 

இதுதொடர்பாக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- விழுப்புரம் வடக்கு மாவட்டட் செஞ்சி கிழக்கு ஒன்றியம் செஞ்சி பேரூர் கழக செயலாளர் காஜா நஜீர் அவர்களை பேரூர் கழக செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவித்து கழகப் பணிகள் செவ்வனே நடைபெற அவருக்கு பதிலாக எம்.கார்த்திக் அவர்கள் செஞ்சி பேரூர் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். 

Tap to resize

Latest Videos

undefined

ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூர் கழக அமைப்பின் பிற நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார். காஜா நஜீர் அமைச்சர் மஸ்தானின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!