Tamilnadu Flood:தொலச்சு கட்டிடுவேன் பாத்துக்க.. அலட்சியம் காட்டிய அரசு அதிகாரிகளை அலறவிட்ட அமைச்சரின் வீடியோ.!

By vinoth kumarFirst Published Nov 14, 2021, 6:00 PM IST
Highlights

மின்சார வசதி செய்தி கொடுக்காமல் இருந்த அரசு அதிகாரிகளை லெப்ட் ரைட் வாங்கினார். ஒழுங்காக பணி செய்யவில்லை என்றால் சஸ்பெண்ட் செய்து விடுவேன் என உச்சக்கட்ட கோபத்திற்கு சென்றார். மேலும், பெட்ஷீட் போர்வை எங்கே? உணவு எங்கே? எப்போது உணவு வரும்? உணவு எங்கே இருந்து வருகிறது? என்று துருவி துருவி அதிகாரிகளை கேள்வி கேட்டார். 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நிவாரண முகாம்கள் தங்க வைக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு போதிய வசதி செய்து கொடுக்காத அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து விடுவேன் என அமைச்சர் மனோ தங்கராஜ்  எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை அக்டோபர் 26 அன்று தொடங்கியது. தொடங்கியது முதலே வட தமிழகத்தில் சென்னையையும் பதம் பார்த்து வந்த மழை, டெல்டா மாவட்டங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் கடும் சேதங்களையும் பாதிப்புகளையும் பருவ மழை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களை அமைச்சர் மனோதங்கராஜ் ஆய்வு செய்தார். 

ஆய்வு செய்தால் மட்டும் போதும் என்று எண்ணாமல் அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு மக்கள் தங்குவதற்கு போதிய, உணவு உள்ளிட்டவைகள் உடனடியாக செய்து கொடுக்கும்படி உத்தரவிட்டார். இதனால் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் பல்வேறு இடங்களில் ஆய்வு பணிகளை முடித்து விட்டு வைக்கலூர் பகுதியில் ஆய்வு செய்ய அமைச்சர்  மனோதங்கராஜ் வந்தார். அப்போது, பாதிக்கப்பட்ட மக்கள் கலிங்கராஜபுரத்தில் தங்க வைக்கப்படுள்ளனர் என்பதை அறிந்து அங்கு விரைந்தார். 

அப்போது, மின்சார வசதி செய்தி கொடுக்காமல் இருந்த அரசு அதிகாரிகளை லெப்ட் ரைட் வாங்கினார். ஒழுங்காக பணி செய்யவில்லை என்றால் சஸ்பெண்ட் செய்து விடுவேன் என உச்சக்கட்ட கோபத்திற்கு சென்றார். மேலும், பெட்ஷீட் போர்வை எங்கே? உணவு எங்கே? எப்போது உணவு வரும்? உணவு எங்கே இருந்து வருகிறது? என்று துருவி துருவி அதிகாரிகளை கேள்வி கேட்டார். இதனால் ஆடி போன அதிகாரிகள் உடனடியாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய ஆரம்பித்தனர். அதிகாரிகள் உறுதி அளித்தும் அங்கு இருந்து செல்லாத அமைச்சர் மனோ தங்கராஜ், உணவு, பெட்ஷீட், போர்வை, தலையணை, முக்கியமாக மின்சார வசதி என்று அனைத்தும் ஏற்படுத்தப்பட்டது என்பதை களத்தில் நின்று உறுதி செய்தார்.  

"

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களிடம் சென்று  மழை வெள்ளம் பாதிப்பு ஏற்படாதவாறு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தரப்படும் என உறுதியளித்தார்.  அமைச்சரின் இந்த அதிரடி நடவடிக்கையை பார்த்து பொதுமக்கள் வியந்தனர். பாதிக்கப்பட்ட மக்களின் மனநிலையில் இருந்து அமைச்சர் பேசி உடனடியாக நடவடிக்கை எடுத்தது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர். அலட்சியம் காட்டிய அதிகாரிகளை அமைச்சர்  மனோ தங்கராஜ் லெப்ட் ரைட் வாங்கிய வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

click me!