நகர்புற உள்ளாட்சி தேர்தல்.. அடுத்த சென்னை மேயர் யார் ..?- அமைச்சர் விளக்கம்

By manimegalai aFirst Published Nov 24, 2021, 5:18 PM IST
Highlights

விரைவில் நடக்கவிள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மறமுக தேர்தல் மூலமாகவே சென்னை மாநகராட்சியின் மேயர் தேர்ந்தெடுக்கப்படுவார் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தென்சென்னை மாவட்ட திமுக அலுவலகத்தில் விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஏதேனும் மாற்றம் செய்தால், நீதிமன்றம் சென்று காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது . எனவே அதனை தவிர்க்கும் பொருட்டு கடந்த அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட வரைமுறையின்படியே வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்தார். அதே போல் சென்னை மேயர் தேர்தல் மறைமுக தேர்தலாகவே நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

மேலும் ஐ.ஐ.டி. வளாகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டிருப்பது வண்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதுவரை தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி 76 சதவீதம் பேருக்கும், இரண்டாவது தவணை தடுப்பூசி 44 சதவீதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தனியார் மருத்துவமனையில் கையிருப்புள்ள தடுப்பூசி குறித்தான கேள்வி, தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் பெரிய அளவில் கொரோனா தடுப்பூசி கையிருப்பில் இல்லை என்பதால் தடுப்பூசி பயன்படுத்தாமலேயே காலாவதியாகும் நிலை ஏற்பட வாய்ப்பில்லை என உறுதிப்பட தெரிவித்தார்

click me!