போட்டி பொதுக்குழுவை கூட்டபோகிறார் சசிகலா.. எடப்பாடியின் ஹார்ட் பீட்டை எகிறவைத்த புகழேந்தி.

By Ezhilarasan BabuFirst Published Nov 24, 2021, 4:07 PM IST
Highlights

இவர்கள் ஒருங்கிணைப்பாளர்களா? என்பதற்கான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தேர்தல் ஆணையம் நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட முடியாது, அதிமுகவின் பொதுக்குழு கூடினால் அது நீதிமன்ற தீர்ப்பை மீறுவதாக அமையும், எனவே விரைவில் சசிகலா போட்டி பொதுக்குழுவை கூட்ட வாய்ப்புள்ளது எனவே ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் அதிமுக பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக ஒரு மாநகராட்சியில் கூட வெற்றி பெறாது என்றும், சசிகலாவை கட்சியில் சேர்க்கும் முடிவில் ஓ.பன்னீர்செல்வம்  மனநிலை வானிலையை போல இருப்பதாகவும் அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி விமர்சித்துள்ளார். நகர்ப்புற தேர்தலுக்குப் பிறகு கட்சிக்குள் புரட்சி வெடிக்க வாய்ப்புள்ளது என்றும், விரைவில் சசிகலா போட்டி பொதுக்குழுவை கூட்ட இருக்கிறார் என்றும் புகழேந்தி  எச்சரித்துள்ளார். இது எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பறி கொடுத்துள்ளது, அதைத் தொடர்ந்து நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளது. அதிமுகவின் இந்த வீழ்ச்சியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது, கட்சியை காப்பாற்ற வேண்டுமெனில் தான் காட்சியை கைப்பற்ற வேண்டும் என அறிவித்துள்ள சசிகலா  தொண்டர்களை நேரில் சந்தித்து ஆதரவு பெற சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். சசிகலா எத்தனை முயற்சிகளை எடுத்தாலும்  தங்களுக்கு கவலை இல்லை, அவருக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அவரை கட்சியில் சேர்ப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் திட்டவட்டமாக கூறி உள்ளனர். ஆனால் அதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமை முடிவு செய்யும் எனக் கூறியுள்ளார்.

அவரைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் ஜேசிடி பிரபாகரன் ஆகியோர் சசிக்கு ஆதரவாக கருத்து கூறி வருகின்றனர். இந்நிலையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் செய்தி தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி, எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பேசி வருகிறார். இந்நிலையில் முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் மீது தொடுத்த மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரான பெங்களூரு புகழேந்தி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் மீது நான் கொடுத்துள்ள மானநஷ்ட ஈடு வழக்கு, டிசம்பர் 11ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கின் தீர்ப்புக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். அது சரித்திரம் வாய்ந்த தீர்ப்பாக அமையும். இன்று நடைபெறும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாக பேசுவதாக கூறுகிறார்கள். நீதிமன்ற உத்தரவை மீறி இந்த விவகாரம் தொடர்பாக பேசுகின்றனர்.

இவர்கள் ஒருங்கிணைப்பாளர்களா? என்பதற்கான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தேர்தல் ஆணையம் நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட முடியாது, அதிமுகவின் பொதுக்குழு கூடினால் அது நீதிமன்ற தீர்ப்பை மீறுவதாக அமையும், எனவே விரைவில் சசிகலா போட்டி பொதுக்குழுவை கூட்ட வாய்ப்புள்ளது எனவே ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் அதிமுக பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பொதுக்குழுவை கூட்ட ஓபிஎஸ் இபிஎஸ்க்கு உரிமை கிடையாது, அதையும் மீறி பொதுக்குழுவை  கூட்டினால் அதில் தீர்மானங்கள் நிறைவேற்றினால், அது நீதிமன்ற உத்தரவை மீறுவதாகும். தேர்தலில் தோற்று கட்சியே அசிங்கமாக இருக்கும் நிலையில். மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தேவையா? தற்போதுள்ள நிலையில் சீட்டு கேட்கும் மனநிலையில் நிர்வாகிகள் இல்லை, ஆனால் கொள்ளையடித்த முன்னாள் அமைச்சர்கள் வேண்டுமானால் அதிமுக சார்பில் போட்டியிடுவார்கள். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரு மாநகராட்சி கூட அதிமுகவுக்கு கிடைக்காது.

குறிப்பாக கோவை சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகளில் கூட அதிமுக வெல்ல சாத்தியமில்லை. குறையற்ற ஆட்சியை ஸ்டாலின் நடத்தி வருகிறார், தஞ்சையில் மழை வெள்ளம் பாதித்த பகுதியை பாய்ந்து பாய்ந்து இரவில் சென்று பார்வையிடுகிறார் எடப்பாடி பழனிச்சாமி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 90 விழுக்காடு பணத்தை எடப்பாடி பழனிசாமி கொள்ளை அடித்தார், ஊழலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்களை ஏன் திமுக கைது செய்யவில்லை என்ற வருத்தம் எனக்கு உள்ளது. சசிகலாவை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அதிமுக என்ற கட்சி நிலைக்கும், சசிகலாவை கட்சியில் சேர்க்க ஓபிஎஸ் ஒப்புக்கொள்வார், நகர்ப்புற தேர்தலுக்குப் பிறகு கட்சிக்குள் புரட்சி வெடிக்க வாய்ப்பு உள்ளது இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

 

click me!