பாலியல் தொந்தரவால் மாணவிகள் தற்கொலை – ஆசிரியர்களுக்கு தான் இனி ட்ரீட்மெண்ட – அமைச்சர் அதிரடி

By manimegalai aFirst Published Nov 24, 2021, 3:52 PM IST
Highlights

பள்ளிகளில் மாணவ- மாணவியர்களுக்கு நடக்கும் பாலியல் அத்துமீறல்களை தடுக்கும் வகையில் இனி ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் தகுந்த மனநல ஆலோசனை வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் , பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, வழக்கமாக அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 66 லட்சமாக இருக்கும். ஆனால் நடப்பு ஆண்டில் எண்ணிக்கை 77 லட்சமாக உயர்ந்துள்ளது என தெரிவித்தார். மேலும் பள்ளிகளின் மாணவர் சேர்க்கைக்கு ஏற்ப கட்டமைப்புகளை உடனடியாக உருவாக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், பாலியல் தொந்தரவுகளில் இருந்து மாணவ-மாணவிகளை காப்பாற்றுவது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர்களுடன் கலந்தாலோசித்தாகவும் கூறினார்.

பள்ளிக்கூடங்களின் புகார் பலகைகளில் அவசர தொலைபேசி எண்கள் மற்றும் அந்தப் பகுதி காவல் நிலையங்களில் போன் நம்பர்களையும் சேர்த்து எழுத அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர், தற்போதைய நிலையில் உளவியல் ரீதியான கவுன்சிலிங் மாணவ, மாணவிகள் மட்டுமல்லாமல் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் தேவைப்படுகிறது என்றார். ஏற்கனவே கொரோனா பிரச்சனை காரணமாக பள்ளிகள் திறப்பது பெரும் சிரமமாக இருந்தது. திறந்த பின்னர் மழையின் காரணமாக பள்ளிக்கூடங்களை இடைவிடாமல் கொண்டு செல்ல இயலவில்லை. பள்ளிக்கூடங்கள் அனைத்தும் தினமும் இயங்க தொடங்கும் சூழலில் மேற்கண்ட உளவியல் கவுன்சிலிங் அனைத்துப் பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும் என பேட்டியில் கூறினார்.

நடப்பு கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் 5 லட்சத்து 85 ஆயிரம் மாணவ மாணவிகள் புதிதாக சேர்ந்து உள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் பாலியல் ரீதியிலான புகார் எண் சரியாக செயல்படுகிறதா? என்பதையும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என தெரிவித்தார்.
 

மேலும் அவர் , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி திருச்சி தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கு இன்று முதல் விருப்ப மனு அளிக்கப்படுகிறது எனவும், வருகிற 30-ந்தேதி வரை மாவட்ட அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என கூறினார்.

தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழையின் காரணமாக வேளாண் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளன. தமிழக முதலமைச்சர், கூட்டுறவுத்துறை அமைச்சர் தலைமையில் அமைத்த குழு அதன் சேத அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. மேலும் மத்திய குழுவினரும் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு சென்றிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட அளவுக்கு முதல்வர் நிச்சயமாக நிவாரணம் வழங்குவார் என கூறினார்

click me!