தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை.. சீரழிந்து போன சட்டம் ஒழுங்கு.. ஸ்டாலின் அரசை விளாசும் ஓபிஎஸ்..!

By vinoth kumarFirst Published Nov 24, 2021, 3:26 PM IST
Highlights

அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தான் தமிழ்நாட்டில் நிலவுகிறது. சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது என  ஓ.பன்னீர்செல்வம் பதிவிட்டுள்ளார். 

தனியார் வாகன ஓட்டுநர் அரசு பேருந்தை முந்திச் சென்று மறித்து, அரசுப்பேருந்து ஓட்டுநரை இரும்புக் கம்பியால் தாக்கி, கையில் ரத்த காயம் ஏற்படுத்தியதாக செய்தி வந்துள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மதுரையிலிருந்து திருப்பூர் செல்லும் அரசுப்பேருந்து, ஆரப்பாளையத்திலிருந்து கிளம்பி காளவாசல் சென்றது. அப்போது, போக்குவரத்து நெரிசல் காரணமாக பின்னால் வந்த இனோவா காரின்  ஓட்டுநர் முந்தி செல்ல வழி விடும்படி தொடர்ந்து ஹாரன் அடித்து வந்துள்ளார். ஆனால், போக்குவரத்து நெரிசல் காரணமாக அரசு பேருந்து ஓட்டுநனரால் வழிவிட முடியவில்லை. 

இதனால், ஆத்திரமடைந்த இனோவா கார் ஓட்டுநர், அரசுப்பேருந்தை முந்திச்சென்று மறித்து நிறுத்தியிருக்கிறார். இதையடுத்து, வாகனத்திலிருந்து இறங்கிய கார் ஓட்டுநர், பேருந்தின் கண்ணாடியை உடைத்திருக்கிறார். பின்பு ஆபாச வார்த்தைகளால் திட்டியபடி பேருந்து ஓட்டுநரை கல்லாலும், இரும்பு கம்பியாலும் கடுமையாக தாக்கியிருக்கிறார். இதில் பேருந்து ஓட்டுனர் முத்துகிருஷ்ணனின் கைகளில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந் சம்பவத்திற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது என ஓ.பன்னீர்செல்வம் காட்டமாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- மதுரையிலிருந்து திருப்பூர் செல்லும் அரசு பேருந்து ஆரப்பாளையத்திலிருந்து கிளம்பி காளவாசல் சென்று கொண்டிருந்தபோது, போக்குவரத்து நெரிசல் காரணமாக பின்னால் வந்த தனியார் வாகனத்திற்கு வழி கொடுக்க இயலாத நிலையில், ஆத்திரமடைந்த தனியார் வாகன ஓட்டுநர் அரசு பேருந்தை முந்திச் சென்று மறித்து, அரசுப்பேருந்து ஓட்டுநரை இரும்புக் கம்பியால் தாக்கி, கையில் ரத்த காயம் ஏற்படுத்தியதாக செய்தி வந்துள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது.

அரசுப்பேருந்து ஓட்டுநரை இரும்புக் கம்பியால் தாக்கி, கையில் ரத்த காயம் ஏற்படுத்தியதாக செய்தி வந்துள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது.

அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தான் தமிழ்நாட்டில் நிலவுகிறது.

சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது.

— O Panneerselvam (@OfficeOfOPS)

அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தான் தமிழ்நாட்டில் நிலவுகிறது. சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது என  ஓ.பன்னீர்செல்வம் பதிவிட்டுள்ளார். 

click me!