பள்ளி மாணவ மாணவிகளுக்கு தனி பஸ்...!! கொரோனாவிலும் கமல் அதிரடி கோரிக்கை

Published : Nov 24, 2021, 03:04 PM ISTUpdated : Nov 24, 2021, 03:21 PM IST
பள்ளி மாணவ மாணவிகளுக்கு தனி பஸ்...!! கொரோனாவிலும் கமல் அதிரடி கோரிக்கை

சுருக்கம்

பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளிலும், ஜன்னல்களிலும் தொங்கியபடி பயணம் செய்வதை தவிர்க்கவும், மேலும் இருக்கையில் அமர்ந்து பாதுகாப்பாகப் பயணம் செய்யவதை உறுதிசெய்யவும் அரசு பொது போக்குவரத்து கழகம் சார்பில் காலை, மாலை இருவேளைகளில் ‘மாணவர் சிறப்புப் பேருந்து’ இயக்கப்பட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கோரிக்கை வைத்துள்ளது. 

பேருந்துகளில் மாணவர்கள் கூட்டநெரிசலில் போதிய இடமின்றி, படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்வது வாழக்கமான ஒன்றாகிவிட்டது. இதனால் அவ்வப்போது மாணவர்களுக்கும், பேருந்து ஓட்டுநனர், நடத்துனர்களுக்கும்  இடையே பிரச்சனைகள் கிளம்பி, தகராறில் முடிவது போன்ற சம்பவங்களும் நடந்துக்கொண்டு தான் இருக்கின்றன. சில சமயங்களில் பேருந்து படிக்கட்டுளிலும் ஜன்னல்களிலும் மாணவர்கள் ஆபத்தான முறையில் தொங்கியபடி , செல்வதால் விபத்து நேரும் அபாயங்களும் நம்மால் பார்க்க முடிகிறது.

இந்நிலையில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளிலும், ஜன்னல்களிலும் தொங்கியபடி பயணம் செய்வதை தவிர்க்கவும், மேலும் இருக்கையில் அமர்ந்து பாதுகாப்பாகப் பயணம் செய்யவதை உறுதிசெய்யவும் அரசு பொது போக்குவரத்து கழகம் சார்பில் காலை, மாலை இருவேளைகளில் ‘மாணவர் சிறப்புப் பேருந்து’ இயக்கப்பட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கோரிக்கை வைத்துள்ளது

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாணவரணி மாநிலச் செயலாளர், போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு, கோரிக்கைக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், "தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்கள் படிக்கட்டுகளிலும், ஜன்னல் கம்பிகளிலும் தொங்கிக்கொண்டே ஆபத்தான முறையில் பயணிப்பது தொடர்கதையாகிவிட்டது. கொரோனா காலம் முடிந்து கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டதிலிருந்து `பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம்’ என அறிவிக்கப்பட்டது.  ஆனால், சென்னை மாநகரில் சாதாரணக் கட்டணம், விரைவுப் பேருந்து, சொகுசுப் பேருந்து என மூன்று வகையான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் சாதாரணக் கட்டணம் வசூலிக்கும் பேருந்தில் மட்டுமே மாணவர்கள் இலவசமாகப் பயணம் செய்ய இயலும்.  

காலை நேரத்தில் பணிக்குச் செல்வோரும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதால், கூட்ட நெரிசல் காரணமாக மாணவர்கள் படிக்கட்டுகளில் பயணம் செய்யும் அவலநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதனால் விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். கொரோனா இரண்டாம் அலை முடிந்து மூன்றாம் அலை குறித்த எச்சரிக்கைகள் வரும் நிலையில், பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாகப் பயணம் செய்ய அவர்களுக்கெனத் தனியாக ‘மாணவர் சிறப்புப் பேருந்து’ இயக்கப்பட வேண்டும்.

மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை கவனத்தில் கொண்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் ‘பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக தனிப்பேருந்து’ இயக்கப்படுவதை அரசு விரைவாகப் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

பேமிலி, பிரெண்ட்ஸ் வாட்ஸ்ஆப் குரூப்களில் கூட விஷம் பரப்பும் மதவாதிகள்.. அலெர்ட் கொடுக்கும் முதல்வர்..
நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு