கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ஓபிஎஸ்.. அமைச்சர் மா.சுப்பிரமணியனின் நெத்தியடி பதிலால் ஆடிப்போன அதிமுக.!

By vinoth kumarFirst Published Jul 2, 2021, 2:36 PM IST
Highlights

தமிழ்நாட்டில் உள்ள தடுப்பூசி நிறுவனங்கள் எல்லாம் அப்போதைய ஆட்சியாளருக்கு தெரிந்து இருந்தால் 10 ஆண்டுகளில் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனம் திறந்திருப்பார்கள் என்றார். நாங்கள் எடுத்த முயற்சியைக் கூட அவர்கள் எடுக்கவில்லை.

மத்திய அரசு செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனத்திற்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஆலோசித்து வருவதாகவும், நல்ல பதில் வரும் வரை ஓ.பி.எஸ்-உம் காத்திருந்தால் நன்றாக இருக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நெத்தியடி பதில் கொடுத்திருக்கிறார். 

தமிழகத்தில் நிலவி வரும் தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார். உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி', 'செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைக்கப்பட்ட தடுப்பூசி வளாகத்தில் தடுப்பூசித் தொழிற்சாலை' என அறிவிப்புகளை அறிவித்துவிட்டு, இன்று 'தடுப்பூசி இல்லை' என்று திமுக அரசு கைவிரிப்பதைப் பார்க்கும்போது, 'வாய்ச் சொல்லில் வீரரடி' என்ற பாரதியாரின் பாடல் வரிகள் தான் அனைவரின் நினைவுக்கும் வருகிறது. 

தமிழக முதல்வர் இதில் தனிக் கவனம் செலுத்தி, குறைந்தபட்சம் இந்த ஆண்டுக்குள்ளாவது அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில், தமிழகத்தின் நிலையை மத்திய அரசிடம் எடுத்துச் சொல்லி, அழுத்தம் கொடுத்து, தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளைப் பெற்று தமிழக மக்களை கொரோனா தொற்று நோயிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என  ஓபிஎஸ் கூறியிருந்தார். 

இந்நிலையில், செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனம் குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அளித்துள்ள அறிக்கைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார். அதில், எந்த அரசு வஞ்சித்தது என்பது பொதுமக்களுக்கு நன்றாகவே தெரியும். கடந்த மே 7ம் தேதி வரை ஆட்சி பொறுப்பில் இருந்தது அதிமுகதான். இந்த தடுப்பூசி போடும் பணி தொடங்கியது ஜனவரி 16ம் தேதி தொடங்கப்பட்டது. 5 மாதம் வரை அதிமுக ஆட்சியில் தான் தடுப்பூசி போடப்பட்டது. அப்போது, அதிமுக ஆட்சியில் நாள் ஒன்றுக்கு சரியாக 61 ஆயிரம் பேருக்கு தான் தடுப்பூசி போடப்பட்டது. 

மே 7ம் தேதிக்கு பிறகு ஆட்சிக்கு வந்த திமுக நாள் ஒன்றுக்கு 1.34 லட்சம் தடுப்பூசிகள் போடப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 61,000 தடுப்பூசிகளை செலுத்திய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் இதை சொல்வது ஆச்சரியமாக உள்ளது. அதைவிட 2 மடங்குக்கு மேலாக தடுப்பூசி போடுகின்றன இந்த அரசை பார்த்து இப்படி கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.  

10 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த போது செங்கல்கபட்டில் எச்.எல்.எல்.நிறுவனம் எங்கு இருக்கிறது என்று ஓ.பி.எஸ்க்கு தெரியுமா? என்று கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டில் உள்ள தடுப்பூசி நிறுவனங்கள் எல்லாம் அப்போதைய ஆட்சியாளருக்கு தெரிந்து இருந்தால் 10 ஆண்டுகளில் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனம் திறந்திருப்பார்கள் என்றார். நாங்கள் எடுத்த முயற்சியைக் கூட அவர்கள் எடுக்கவில்லை. மேலும் செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனம் திறப்பது தொடர்பாக மத்திய அரசு யோசித்து வருவதாகவும், நல்ல பதில் வரும் என்ற அவர்,  அதுவரை ஓ.பி.எஸ்-உம் காத்திருந்தால் நன்றாக இருக்கும் என்றார்.

click me!