அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு நெஞ்சு வலி.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!

Published : Dec 01, 2022, 08:22 AM ISTUpdated : Dec 01, 2022, 08:25 AM IST
அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு நெஞ்சு வலி.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!

சுருக்கம்

திமுக அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராக கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இருந்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு வீட்டில் இருந்த போது திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நெஞ்சு வலி காரணமாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

திமுக அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராக கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இருந்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு வீட்டில் இருந்த போது திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில்  அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இதையும் படிங்க;- டிபிஐ வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் பெயர், திருவுருவச்சிலை..! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

அங்கு அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனை முடிவில் இருதய ரத்த நாளத்தில் அடைப்பு இருப்பதால் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, அவருக்கு ஆஞ்சியோ செய்ய மருத்துவக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது உடல் நிலையை மருத்துக்குழு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 

இதையும் படிங்க;-  சொத்து குவிப்பு வழக்கு.. ஆ.ராசாக்கு அதிர்ச்சி கொடுத்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம்..!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

திமுக ஆட்சியில் அதிகாரிகளின் ராஜ்ஜியம் நடக்கிறது..! வெறுப்பில் அதிமுகவில் இணைந்த செங்கோட்டையன் அண்ணன் மகன்..!
இந்த திமுகவை நம்பாதீங்க..! மக்களை நம்ப வைச்சு ஏமாற்றுவதுதான் அவங்க வேலையே..! விஜய் எச்சரிக்கை..!