BREAKING பொங்கல் பரிசு வழங்கிய தமிழக அமைச்சருக்கு கொரோனா... தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!

Published : Jan 06, 2021, 01:26 PM IST
BREAKING பொங்கல் பரிசு வழங்கிய தமிழக அமைச்சருக்கு கொரோனா... தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!

சுருக்கம்

தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து  அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து  அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சீனாவின் உருவான கொரோனா வைரஸ் இந்தியாவில் ருத்தரதாண்டவம் ஆடியது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டு  பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டு வந்துள்ளனர். சில அமைச்சர்கள், நாடாளுமன்ற  உறுப்பினர்கள் மற்றும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களை ஒப்பிடும் போது தற்போது கொரோனா பரவல் குறைவாகவே இருக்கிறது. இருப்பினும், உருவாறிய புதிய கொரோனா வைரஸ் காரணமாக பொதுமக்கள் மிகுந்த  எச்சரிக்கையுடன் மக்கள் செயல்பட வேண்டும். மாஸ்க் அணிந்து வெளியே செல்ல வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், ஆண்டுதோறும் பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு சார்பில் பொங்கல் பையும், பணமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்வை நேற்று முதல்நாள் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மன்னார்குடியில் மக்களுக்கு பொங்கல் பை வழங்கி தொடங்கி வைத்தார். பிறகு சென்னை வந்த அவருக்கு உடல்சோர்வு ஏற்பட்டது.

இதனையடுத்து, மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, சென்னையில்  உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களில் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

எடப்பாடி பழனிசாமிக்கு மொத்த அதிகாரத்தையும் தூக்கி கொடுத்த பொதுக்குழு உறுப்பினர்கள்.. இபிஎஸ் எடுப்பது தான் முடிவு..!
அதிமுக பொதுக்குழு, செயற்குழுவில் தள்ளு முள்ளு.. நிகழ்ச்சி அரங்கில் பரபரப்பான சூழல்..