ஸ்கெட்ச் போட்டு காத்திருக்கும் மு.க.அழகிரி... திமுகவுக்கு கொங்கு மண்டலத்தில் இருந்து காட்டப்போகும் ஆட்டம்..!

By Thiraviaraj RMFirst Published Jan 6, 2021, 1:09 PM IST
Highlights

மு.க.அழகிரி திமுகவில் இருந்த வரைக்கு தென் மாவட்டங்களில் அவரது கை ஓங்கியிருந்தது. தேர்தலில் தனி பாணியை உருவாக்கி திமுக வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்வார். 

மு.க.அழகிரி திமுகவில் இருந்த வரைக்கு தென் மாவட்டங்களில் அவரது கை ஓங்கியிருந்தது. தேர்தலில் தனி பாணியை உருவாக்கி திமுக வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்வார். அழகிரியின் நீக்கத்திற்கு பிறகு அவரது செயல்பாடுகள் எல்லாமே திமுகவிற்கு எதிரானதாக மாறிவிட்டது. அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தது திமுக. மோடிக்கு எதிரான பிரச்சார அலை அதே நேரத்தில் 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி அபரிமிதமான வெற்றியை பெற்றது.

 அதற்குக் காரணம் தமிழகத்தில் பாஜக, மோடிக்கு எதிராக செய்யப்பட்ட பிரச்சாரம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். அந்த பிரச்சார பாணி சட்டசபைத் தேர்தலில் எடுபட வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளனர். சில தினங்களுக்கு முன்பு வெடித்து கிளம்பி விட்டது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் முதல்வர் நாற்காலியில் ஸ்டாலின் அமர முடியாது எனது ஆதரவாளர்கள் விட மாட்டார்கள் என்று கூறியுள்ளார் மு.க. அழகிரி. மிசன் 200 இலக்குடன் இந்த சட்டசபைத் தேர்தலில் களமிறங்கியுள்ளது திமுக. கடந்த 10 ஆண்டு காலமாக அரியணையில் ஏற காத்திருக்கிறது. ஆட்சியை பிடிக்க 117 இடங்கள் தேவை என்றாலும் அந்த தொகுதிகளாவது கிடைக்க வேண்டும்.

முதல்வர் நாற்காலி கிடைக்குமா முதல்வர் நாற்காலியில் அமர்ந்து ஆட்சி செய்ய வேண்டும் என்பது மு.க. ஸ்டாலினின் நீண்ட நாள் கனவு. சென்னை மேயராக, துணை முதல்வராக ஸ்டாலின் இருந்திருந்தாலும் முதல்வர் பதவியில் அமர வேண்டும் என்ற கடந்த 5 ஆண்டு கால கனவு இம்முறையாவது நிறைவேற வேண்டும் என்று அவரது கட்சி தொண்டர்களும், குடும்ப உறுப்பினர்களும் ஆசைப்படுகின்றனர்.

இந்நிலையில் திமுகவில் அதிருப்தியில் இருக்கும் பலருக்கும் ஸ்கெட்ச் போட்டு வருகிறார் மு.க.அழகிரி. ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க., செயலர் நல்லசிவத்துக்கும், அந்தியூர் ஒன்றியச் செயலர் வெங்கடாசலத்துக்கும், தனித்தனி கோஷ்டி இருக்கிறது. இதனால் சில முக்கிய நிர்வாகிகள், ஓராண்டாகவே, அதிருப்தியில் இருக்கிறார்கள். இவர்களை போல அதிருப்தியில் இருக்கிறவர்களை இழுக்க, அழகிரி தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாகள்.  மாவட்டச் செயலாளர்கள் சுதாரிக்கவில்லை என்றால், வடக்கு மாவட்ட தி.மு.க.,வில் பலர் அழகிரி பக்கம் தாவி விடுவார்கள் எனக் கூறப்படுகிறது. 

click me!