அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரத்தில் டெபாசிட் இழப்பார். அவருக்கு இந்த பதவி திமுக போட்ட பிச்சை.. ஆர்எஸ் பாரதி

By Ezhilarasan BabuFirst Published Jan 23, 2021, 1:48 PM IST
Highlights

ராயபுரம் தொகுதியில் கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக மிகப்பெரிய தவறு செய்து விட்டது, அதை காங்கிரசுக்கு கொடுத்ததால்தான் அமைச்சர் ஜெயக்குமார் இரண்டு முறை வெற்றி பெற்றார். 

இந்த சட்டமன்ற தேர்தலில் ராயபுரம் தொகுதியில் திமுக தான் போட்டியிடும் எனவும் எனவே அதில் அமைச்சர் ஜெயக்குமார் டெபாசிட் இழப்பார் எனவும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி கூறியுள்ளார். 

சென்னை ராயபுரம் பழைய ஆடுதொட்டி சாலையில் ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் அடிப்படை வசதி செய்து தராத அமைச்சர் ஜெயக்குமாரை கண்டித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது மேடையில் பேசிய ஆர் எஸ் பாரதி கூறியதாவ: ஜெயக்குமார் இன்று அமைச்சராக இருக்கிறார் என்றால் அது அவருக்கு திமுக போட்ட பிச்சை. அவரது தந்தையை கவுன்சிலராக உருவாக்கியது திமுக தான். அதனை மறந்து அவர் பேசக்கூடாது.  

ராயபுரம் தொகுதியில் கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக மிகப்பெரிய தவறு செய்து விட்டது, அதை காங்கிரசுக்கு கொடுத்ததால்தான் அமைச்சர் ஜெயக்குமார் இரண்டு முறை வெற்றி பெற்றார். பல்லாயிரக்கணக்கான துப்புரவு பணியாளர்கள் ஓய்வு பெற்ற நிலையில் அவர்களுக்கான நிலுவைத் தொகையை வழங்கத இந்த அரசு, ஆனால் 1000 கோடிக்கு விபரங்களை கொடுத்து இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. சிபிஐ விசாரணையில் இருக்கக்கூடிய பொள்ளாச்சி விவகாரத்தை பேசக்கூடாது என்று வழக்குப் போட்டு இருக்கின்றனர் அதிமுகவினர். பொள்ளாச்சி விவகாரத்தை பொது இடத்தில் வைத்து விவாதிப்போம் வா என பொள்ளாச்சி ஜெயராமனுக்கு ஆர்.எஸ் பாரதி சவால் விடுத்தார். 

ஒரு தொடப்பம் 20 ரூபாயிலிருந்து 30 ரூபாய் வரையில் வாங்கக்கூடிய ஒரு தொடபத்தை 200 ரூபாய் கொடுத்து வாங்கியவர் அமைச்சர் வேலுமணி. 50 ரூபாய் பிளீச்சிங் பவுடர் 200 ரூபாய்க்கு வாங்கியவர் வேலுமணி. தற்பொழுது போடப்படும் பிளீச்சிங் பவுடர் ப்ளீச்சிங் பவுடர் அல்ல சுண்ணாம்பு தான் போடுகின்றனர். மிகப்பெரிய ஊழல் செய்திருக்கிறார். தமிழ்நாடு முழுவதும் இதை டெண்டர் எடுத்தவர் வேலுமணியின் தம்பி தான் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார் ஆர் எஸ் பாரதி.  

 

click me!