இவரு பெரிய இம்சை அரசனா இருக்காருப்பா !! ஸ்டாலினை கலந்து கட்டி அடிச்ச அமைச்சர் !!

Published : Nov 28, 2019, 08:21 AM IST
இவரு பெரிய இம்சை அரசனா இருக்காருப்பா !! ஸ்டாலினை கலந்து கட்டி அடிச்ச அமைச்சர் !!

சுருக்கம்

''தமிழகத்தின் இம்சை அரசனாக திமுக  தலைவர் ஸ்டாலின் உள்ளார்' என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் அதிரடியாக தெரிவித்தார்.

சென்னையில் செய்தியானர்களிடம் பேசிய அவர், மீனவர்கள் நீண்ட துாரம் சென்று தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வசதியாக நவீன மீன்பிடி படகுகள் வாங்க 40 சதவீதம் மானியம் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் 32 கோடி ரூபாயில் 2200 மீன்பிடி படகுகள் வழங்கப்பட உள்ளது என்றும் கூறினார்..

உள்ளாட்சி தேர்தலை 2016ல் நடத்த ஏற்பாடுகள் நடந்த நிலையில் தி.மு.க. நீதிமன்றம் சென்றதால் தேர்தல் தடைபட்டது. 'டிசம்பர் .13க்குள் தேர்தல் அறிவிக்கப்படும்' என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

தேர்தல் ஆணையம் தேதியை அறிவிக்கும்.தேர்தல் நடத்துவதில் அரசு உறுதியாக உள்ளது. மறைமுக தேர்தலை தி.மு.க.தான் எடுத்து வந்தது. ஜனநாயக ரீதியில் சுதந்திரமாக அமைதியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது அரசின் நிலை.

தேர்தலை தடுத்து நிறுத்த தி.மு.க.வும் எதிர்க்கட்சிகளும் நீதிமன்றம் சென்றுள்ளன. தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் கருத்து தெரிவிக்கும்.தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் இம்சை அரசனாக உள்ளார் என கலாய்த்தார்.

சமூக நீதியை குழிதோண்டி புதைத்தது தி.மு.க. தான். ஜெயலலிதா ஆட்சியில்தான் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்று தந்தார். அவர் வழியில் தமிழக அரசு இட ஒதுக்கீட்டை முறையாக செயல்படுத்துகிறது என்றும் ஜெயகுமார் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!