என்னை இப்படி கைவிட்டுட்டீங்களே... கர்நாடக மாஜி முதல்வர் தாரை தாரையாக கண்ணீர்.., தேர்தல் பிரசாரத்தில் அழுது புலம்பல்!

By Asianet TamilFirst Published Nov 28, 2019, 6:55 AM IST
Highlights

நாடாளுமன்றர்த் தேர்தலில் மாண்டியா தொகுதியில் தனது மகன் நிகிலை நிறுத்தினார். ஆனால், இத்தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்ட நடிகை சுமலதா வெற்றி பெற்றார். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான குமாரசாமி, மாண்டியாவில் தேர்தல் பிரசாரம் செல்லாமல் இருந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியதன்பேரில் மாண்டியாவில் கே.ஆர்.பேட்டை தொகுதியில் பிரசாரம் செய்ய குமாரசாமி வந்தார்.

இடைத்தேர்தலில் வாக்குச் சேகரிக்க சென்று கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி  தாரை தாரையாக கண்ணீர் விட்ட சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
கர்நாடகாவில் 15 சட்டப்பேரவைத் தேர்தலில் டிசம்பர் 5 அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்தில் இந்த மூன்று கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. முன்னாள் முதல்வர் குமாரசாமியும் தீவிர  தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால், மாண்டியா மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.பேட்டை தொகுதியில் மட்டும் குமாரசாமி பிரசாரம் செய்யாமல் இருந்தார். நாடாளுமன்றர்த் தேர்தலில் மாண்டியா தொகுதியில் தனது மகன் நிகிலை நிறுத்தினார். ஆனால், இத்தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்ட நடிகை சுமலதா வெற்றி பெற்றார்.
இதனால், மன உளைச்சலுக்கு ஆளான குமாரசாமி, மாண்டியாவில் தேர்தல் பிரசாரம் செல்லாமல் இருந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியதன்பேரில் மாண்டியாவில் கே.ஆர்.பேட்டை தொகுதியில் பிரசாரம் செய்ய குமாரசாமி வந்தார். அப்போது அவர் பேசும்போது உணர்ச்சிவசப்பட்டு தாரை தாரையாக கண்ணீர் வடித்தார்.  “எம்.பி. தேர்தலில் என் மகன் நிகிலை நீங்கள்தான் போட்டியிட சொன்னீர்கள். அதனால்தான் அவர்  தேர்தலில் நின்றார். ஆனால் அவரையும், என்னையும் நீங்கள் எல்லோரும் கைவிட்டுவிட்டீர்கள்.  நீங்களே கைவிட்ட பிறகு எனக்கு எப்படி சுயமரியாதை கிடைக்கும்? அன்றைய நாள் நான் இரவு முழுவதும் தூங்க முடியாமல் அவதிப்பட்டேன். 
மண்டியா மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளின் ரூ.26 ஆயிரம் கோடி பயிர்கடனை நான் தள்ளுபடி செய்தேன். இதுதான் என்னுடைய தவறா?. அப்போது வங்கி கடனால் அவதிப்பட்டுவந்த பெண்களை பார்த்து எனது கண்களில் நீர் வந்தது. தற்போது மீண்டும் உங்களை பார்க்கும்போது கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.” என்று கூறியபோது தாரை தாரையாக குமாரசாமியின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. அதைத் துடைத்துக்கொண்டே குமாரசாமி உருக்கமாகப் பேசினார்.
ஜேடிஎஸ் கட்சிக்கு தெற்கு கர்நாடகாவில் அதிக செல்வாக்கு உள்ளது. குறிப்பாக மாண்டியாவில் அக்கட்சிக்கு நல்ல ஆதரவு உள்ளது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் அந்தக் கட்சி கடும் பின்னடைவை சந்தித்தது. இந்நிலையில் தங்களுக்கு செல்வாக்குள்ள தொகுதியில் பிரசாரம் செய்யும்போது குமாரசாமி கண்ணீர் வடித்தார். ஏற்கனவே முதல்வராக இருந்தபோதும் குமாரசாமி ஒருமுறை மக்கள் மத்தியில் கண்ணீர் வடித்தார்.

click me!