இது கொஞ்சம் ஓவரா இல்ல !! விரைவில் மத்தியிலும் சிவசேனா ஆட்சியாம் !! சஞ்சய் ராவத் தான் சொல்றாரு !!

Published : Nov 27, 2019, 11:03 PM IST
இது கொஞ்சம் ஓவரா இல்ல !!  விரைவில் மத்தியிலும் சிவசேனா ஆட்சியாம் !! சஞ்சய் ராவத் தான் சொல்றாரு !!

சுருக்கம்

மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சியைப்  பிடித்ததை போல், மத்தியிலும் ஆட்சியை பிடிப்போம், ஆச்சரியப்படாதீர்கள் என சிவசேனா எம்பி., சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடந்த சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியின் தலைவராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டார். 

பின்னர், கூட்டணி கட்சியினர் இணைந்து கவர்னரை சந்தித்து, ஆட்சியமைக்க உரிமை கோரினர். இதனை ஏற்று கொண்ட கவர்னர், ஆட்சி அமைக்க வரும்படி அழைப்பு விடுத்தார். இதன்படி, உத்தவ் தாக்கரே, நாளை மகாராஷ்ட்ரா முதலமைச்சராக  பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா எம்பி., சஞ்சய் ராவத் , தேசத்தின் அரசியலில் மாற்றம் ஏற்படத் தொடங்கி இருக்கிறது. மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சியைப் பிடித்து.

முதலமைச்சராக  உத்தவ் தாக்கரே பொறுப்பேற்க  உள்ளார். எதிர்காலத்தில் சிவசேனா கூட்டணி மத்தியில் ஆட்சியைப் பிடித்தாலும் ஆச்சரியப்படாதீர்கள். 
மாற்றம் மகாராஷ்டிராவில் இருந்து தொடங்கி இருக்கிறது. மகாராஷ்டிராவைப் போல் மத்தியிலும் ஆட்சி அமைக்க கூடாதா?.  என்று சஞ்சய் ராவத்  கேள்வி எழுப்பினார்..

PREV
click me!

Recommended Stories

Deep Sleep Mode-க்கு சென்ற CM Vijay – உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்
Breaking News: மஃப்டியில் வந்த அமைச்சர்.! ரூ.4,000 மாமூல் கேட்ட அர்ச்சகர்கள் - திருச்செந்தூர் கோவிலில் பரபரப்பு.!