
உடும்பை போட்டு மதில் மேல் ஏறிய திருடன் மக்கள் பார்த்ததும் உடும்பு புடிக்க வந்தேன் என்றானாம் என்ற கதையை கூறி டிடிவி ஒரு திருடன் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஒபிஎஸ்சும் இபிஎஸ்சும் ஒன்றாக இணைந்ததிலிருந்து டிடிவி தினகரன் பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார்.
எடப்பாடிக்கு எதிராக 20 எம்.எல்.ஏக்களை திரட்டி ஆட்சியை கலைக்க போவதாக மிரட்டி வருகிறார். அதற்கு பதிலடியாக எடப்பாடியும் ஈடுகொடுத்து செயலாற்றி வருகின்றார்.
தினகரனையும் சசிகலாவையும் பொதுக்குழு கூட்டி நீக்கம் செய்வதாகவும் டிடிவி தினகரன் செய்யும் நியமனங்கள் எதுவும் செல்லாது எனவும் தெரிவித்தார் எடப்பாடி.
இதைதொடர்ந்து டிடிவி தினகரன் நாங்களே உண்மையான அதிமுக கட்சி என கூறி எடப்பாடி தரப்பு நிர்வாகிகளை நீக்கம் செய்து அவரது தரப்பு நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார்.
இதனிடையே ஆரம்ப தினம் முதலே டிடிவி தினகரனுக்கு எதிராக அமைச்சர் ஜெயக்குமார் கடும் விமர்சனத்தை முன்வைத்து பதிலடி கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் உடும்பை போட்டு மதில் மேல் ஏறிய திருடன் மக்கள் பார்த்ததும் உடும்பு புடிக்க வந்தேன் என்றானாம் என்ற கதையை கூறி டிடிவி ஒரு திருடன் என கூறினார்.