திமுகவிற்கு அரசியல் பண்பாடு தெரியவில்லை... அமைச்சர் ஜெயகுமார் வேதனை!

Published : Aug 27, 2018, 01:21 PM ISTUpdated : Sep 09, 2018, 07:35 PM IST
திமுகவிற்கு  அரசியல் பண்பாடு தெரியவில்லை... அமைச்சர் ஜெயகுமார் வேதனை!

சுருக்கம்

கலைஞர் மறைவின்போது உரிய அரசு மரியாதை வழங்கி அரசியல் பண்பாட்டுடன் அதிமுக நடந்து கொண்டதாக தெரிவித்த மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அரசியல் பண்பாட்டை திமுக கடைபிடிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று  பாளையங்கோட்டையில் ‘அரசியல் ஆளுமை: கலைஞர்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கலைஞர் நினைவேந்தல் கூட்டத்தில் தமிழகத்தின் அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்ற நிலையில் அதிமுகவிற்கு அழைப்பு வராததை அடுத்து. கலைஞர் மறைவின்போது உரிய அரசு மரியாதை வழங்கி அரசியல் பண்பாட்டுடன் அதிமுக நடந்து கொண்டதாக தெரிவித்த மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அரசியல் பண்பாட்டை திமுக கடைபிடிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி கோவையில் துணை முதல்வர் பன்னீர்செல்வத்திடம், திமுக தலைவர் கலைஞரின் நினைவேந்தல் கூட்டத்தில் பாஜக தலைவர் அமித்ஷா கலந்துகொள்கிறார். அதிமுகவுக்கு அழைப்பு வந்துள்ளதா?   ஆளுங்கட்சி சார்பில் நீங்கள் கலந்துகொள்வீர்களா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, இதுவரை எங்களுக்கு எந்த அழைப்பும் வரவில்லை. அழைப்பு வந்தால் முதல்வரோடு ஆலோசித்து கலந்துகொள்வது கலந்துகொள்வது குறித்து முடிவெடுக்கப்படும் என பதிலளித்தார்.

இந்நிலையில் நேற்று  பாளையங்கோட்டையில் ‘அரசியல் ஆளுமை: கலைஞர்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கலைஞர் நினைவேந்தல் கூட்டத்தில் தமிழகத்தின் அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், அரசியல் பண்பாடு பேணிக் காக்கப்பட வேண்டும், எல்லோரும் அவற்றை பின்பற்ற வேண்டும்.

கலைஞர் மறைவின்போது உரிய அரசு மரியாதை வழங்கி அரசியல் பண்பாட்டுடன் நாங்கள் நடந்து கொண்டோம். திமுக அதை பின்பற்றவில்லை என்றால் அதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும்” என்றவர் திமுகவின் உட்கட்சி பூசலைப் பயன்படுத்தி அதிமுக குளிர்காய விரும்பவில்லை என்றும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை மக்களுக்கு உள்ளதாகவும் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
விஜய் கை ஓங்கிவிடக்கூடாது..! வேகத்தைக் கூட்டும் பாஜக..! அண்ணாமலைக்கு முக்கியப் பொறுப்பு..!