திமுகவின் நிரந்தர தலைவர் கலைஞர் தாங்க… வேறு யாரும் தலைவராக முடியாது… ஸ்டாலினை வம்புக்கிழுக்கும் அழகிரி…

Published : Aug 27, 2018, 12:25 PM ISTUpdated : Sep 09, 2018, 08:04 PM IST
திமுகவின் நிரந்தர தலைவர்  கலைஞர் தாங்க… வேறு யாரும்  தலைவராக முடியாது… ஸ்டாலினை வம்புக்கிழுக்கும் அழகிரி…

சுருக்கம்

65 மாவட்டச் செயலாளர்களும் முன்மொழிந்து நாளை நடைபெறவுள்ள திமுக பொதுக்குழுவில் அக்கட்சியிள் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்படவுள்ள நிலையில் மு.க.அழகிரி  திமுகவின்  நிரந்தர தலைவர் கருணாநிதிதான் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வம்புக்கிழுத்துள்ளார்.

கருணாநிதி மறைந்ததையடுத்து திமுக செயல் தலைவராக உள்ள ஸ்டாலின் அக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என அக்கட்சியின் தொண்டர்க்ள எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஆனால் கருணாநிதி மறைந்த  மூன்றாவது நாளே அவரின் மூத்த மகனும், திமுகவில் இருந்து நீக்கப்பட்டவருமான மு.க.அழகிரி, திமுகவின் தொண்டர்கள் அனைவரும் எனது பின்னால் உள்ளனர் என்று ஸ்டாலினுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார்.

வரும் செப்டர்பர் 5 ஆம் தேதி சென்னையில் மிகப் பிரமாண்டமான பேரணி நடத்த உள்ளதாகவும் அழகிரி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் திமுக தலைவர் மற்றும் பொருளாளரை தேர்ந்தெடுப்பதற்காக நாளை சென்னையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் கூடுகிறது. அதில் ஸ்டாலின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். இதற்காக நேற்று அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

திமுகவின் 65 மாவட்ட செயலாளர்களும் முன்மொழிந்த வேட்பு மனுவை அவர் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் தாக்கல்  செய்துள்ளார். இதையடுத்து நாளை திமுகவின் புதிய தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்கிறார்.

இந்நிலையில் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது எனப் பொருள்படும் வகையில், திமுகவின் நிரந்தர தலைவர் கருணாநிதிதான் என மு.க.அழகிரி தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இது திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
விஜய் கை ஓங்கிவிடக்கூடாது..! வேகத்தைக் கூட்டும் பாஜக..! அண்ணாமலைக்கு முக்கியப் பொறுப்பு..!