மீண்டும் தலைகாட்டிய மணல் மாஃபியா ஆறுமுக சாமி... கள்ள லாட்டரி லீமா மார்டின்! திமுக மீடிங்கில் சுவாரஸ்யம்

By sathish kFirst Published Aug 27, 2018, 12:04 PM IST
Highlights

நேற்று முன்தினம்  கலைஞர் புகழுக்கு வணக்கம் செலுத்துவதற்காக திரைத்துறையை சேர்ந்த கலைஞர்கள் இணைந்து கோவையில் "மறக்கமுடியுமா கலைஞரை" நிகழ்ச்சியில், பல சுவாரஷ்ய சம்பவங்கள் நடந்தது. அதில் ஹைலைட்டே  மணல் ஆறுமுகசாமி, லாட்டரி அதிபராக ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த மார்ட்டின் மனைவி லீமா மார்ட்டின் ஜெயலலிதா மறைவிற்குப் பின் லைம் லைட்டுக்கு வந்தது தான்.

2003ல் தமிழகத்தில் லாட்டரிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், கர்நாடகாவிலும் இவரது சாம்ராஜ்யம் பரவியது. சிக்கிம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் இவருக்கு ஆதிக்கம் உண்டு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, மேற்கு வங்கம், சிக்கிம், அருணாச்சல பிரதேசம், மேகாலயா, பஞ்சாப் என பல மாநிலங்களில் தனது கள்ள லாட்டரி சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தினார் மார்ட்டின். 

லாட்டரியின் மூலம் ஹவாலா பணத்தையும், கருப்புப் பணத்தையும் வெள்ளையாக மாற்றுவது, வருமானவரி முறைகேடுகள் என்று சகலவிதமான பொருளாதாரக் குற்றங்களிலும் ஈடுபட்டுவந்தார் மார்ட்டின். அதற்காகவே லாட்டரி மட்டுமின்றி ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களையும் தொடங்கி மிகப் பெரிய சாம்ராஜ்ஜியத்தையே கட்டியமைத்து நடத்திவருகிறார். மார்ட்டின் குழுமங்களின் மொத்த சொத்துமதிப்பு சுமார் ரூ.7,000 கோடியைத் தாண்டும்.

லீமாவின் கணவர் மார்ட்டினின் லாட்டரி முறைகேடுகள் மற்றும் பொருளாதாரக் குற்றங்களுக்காக அவர் மீது பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் உள்ளன. குறிப்பாக கேரளாவில் மட்டும் 32 வழக்குகள் சி.பி.ஐ-யால் விசாரிக்கப்பட்டு வருகின்றன. உதாரணமாக, 2000 -ம் ஆண்டு கேரளத்தில் நடந்த லாட்டரி மோசடியின் மூலம் சிக்கிம் மாநில அரசை சுமார் ரூ.4500 கோடி மோசடி செய்து ஏமாற்றியதாக மார்ட்டினின் மீது வழக்கு உள்ளது.

1990 -களில் அ.தி.மு.க. அரசுடன் இணக்கமான உறவைப் பேணி தனது லாட்டரி மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலை வெற்றிகரமாக நிலைநாட்டிக் கொண்ட மார்ட்டின், பின்னர் கருணாநிதி ஆட்சிக்கு வந்தவுடன் தனது விசுவாசத்தை இடம் மாற்றிக் கொண்டார். பின்னர் 2001 -ல் மீண்டும் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் பேரம் படியவில்லை. இதையடுத்து தான் 2003 -ம் ஆண்டு தமிழகத்தில் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்டது. 

கடந்த 2007 -ம் ஆண்டு லாட்டரி விற்பனைக்கு கர்நாடக மாநில அரசு தடை விதித்தது. ஆனாலும், மாநில அரசின் மூத்த அதிகாரிகளின் உதவியுடன் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை நடந்து வந்தது. 

 2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், நிலமோசடி வழக்கில், மார்ட்டின் கைது செய்யப்பட்டார். அதிமுக ஆட்சியில் மார்ட்டின் மீது வழக்குகள் தொடுக்கப் பட்டது. மார்ட்டின் மீது  13 வழக்கு போடப்பட்டது.  7 மாதம் சிறைக்குப் பின் ஜாமீன் பெற்ற மார்ட்டின், கடைசியாக, கொடுமுடியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை தொடர்பாக பதிவான வழக்கில், கொடுமுடி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை ஜாமீன் பெற்றார்.

2011 -ம் ஆண்டு கருணாநிதி வசனத்தில் உருவான ‘இளைஞன்’ திரைப்படத்தை  மார்ட்டின் தான் தயாரித்தார். வசனம் எழுதியதற்காக கருணாநிதிக்கு வழங்கப்பட்ட சம்பளம் ரூ. 45 லட்சம். இவ்வாறு தொடக்கம் முதலே தனது கள்ள லாட்டரி தொழிலை நடத்த அரசியல் கட்சிகளுடன் இணக்கமான உறவைப் பேணி வந்தவர் தான் மார்ட்டின். இந்த வகையில், தனது கல்வி வியாபாரத்தை பெருக்கிக் கொள்வதற்காகவே  பாரிவேந்தர் பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக  கட்சியில் சென்ற நாடாளுமன்ற தேர்தலின் போது மார்ட்டினின் மனைவி லீமா மார்ட்டின் இணைந்தார்.  

கடந்த 2014 பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு மோடி தமிழகம் வந்த போது அதே மேடையில் வாளுடன் காட்சியளித்தார் லீமா. பாஜகவில் சேர்ந்த மார்ட்டினின் மகனான சார்லசின் சகோதரர் டைசன், "தமிழர் விடியல் கட்சி" என்ற அமைப்பைத் துவங்கி, மே-17 இயக்கத்துடன் செயல்பட்டுவந்தார்.  

அப்பா முன்னர்  திமுக மற்றும் அதிமுக கட்சிகளுடன் உறவாடி தனது கள்ள லாட்டரி மற்றும் ரியல் எஸ்டேட் தொழில்களை நடத்தியவர்.  பாரிவேந்தர் பச்சமுத்துவின் கட்சியின் உறுப்பினர். ஒரு மகன் தமிழ் தேசியவாதி இன்னொரு மகன், பா.ஜ.க உறுப்பினர்.

"மணல் மாஃபியா ஆறுமுகசாமி" இது வேற லெவல் டீலிங்... 

வைகுண்டராஜன், பி.ஆர்.பி வரிசையில் மணல் மாஃபியா ஆறுமுகசாமி,  மணற் கொள்ளை இது சாதரணமா ஒன்னு ரெண்டு குவாரி வச்சி ஓட்டிகிட்டு இருக்கற ஆளு இல்லை இந்த ஆறுமுக சாமி.  சென்னையை  சுற்றி மட்டுமே 15 குவாரி. அதும் போக தெற்கே ஏகப்பட்ட குவாரி. எப்படியும் 150-லிருந்து 200 குவாரி வரைக்கும் தமிழ் நாட்டில்  மட்டுமே இருக்கிறது.  இது  போக கர்நாடகாவில் ஹொசப்பேட்ல்  இரும்பு மண் குவாரி என ஆற்றுமலை பண லோடாக மாற்றினார்.

சாதாரணமாக ஆறுமுகசாமியின் உற்பத்தி சக்திகளில் 80 சதவீதம் பயன்படுத்தப்பட்டாலே தமிழகத்தின் நீராதாரங்களில் இருந்து நாளொன்றுக்கு சுமாராக 12 லட்சம் டன் மணல் அள்ளப்பட்டிருக்கிறது. மொத்த தமிழகத்தையும் பெரும் பள்ளமாக தோண்டியெடுத்து  விற்றுக் கொண்டிருந்தவர்தான்  இந்த மணல் மாபியா  என சொல்லப்படும் ஆறுமுகசாமி. தாகத்தில் தவிக்கும் ஒரு மாநிலத்தில் நீர்பிடிப்பு ஆதாரங்களான மணலை கேட்பாரின்றிக் கொள்ளையடிக்கும் தமிழக ஆறுகளை மொத்தமாக அள்ளி காசாக்கினார்.

தாசில்தாரு ரேஞ்சு இல்லை... கலெக்ட்டர், மினிஸ்டர்  லெவல்ல டீலிங்  பத்து வருசத்திலே அபார வளர்ச்சி எப்படி?  கருணாநிதி ஜெயலலிதா என யார் ஆட்சியா இருந்தாலும் மணலைப் பொருத்தளவில்  ஆறுமுகசாமி  ராஜ்ஜியம் தான். சூப்பர்வைசர்  மேனேஜர்  மத்த ஸ்டாப் கணக்கே பத்தாயிரத்துக்கு மேல வரும். டிரைவர்கள் மட்டும்  25 ஆயிரம் பேர் மேல.

ஒரு வண்டிக்கு ரெண்டு டிரைவர், தமிழ்நாட்டுல எந்த ஊர்ல எந்த ஆறு ஓடுது, அதோட கிளைங்க எங்கெல்லாம் ஓடுது? அந்த ஏரியாவுக்கு பஞ்சாயத்து தலைவர் யாரு? அந்த ஊர்ல  எத்தனை கட்சி? எந்த கட்சில எவ்வளவு ஆளுங்க இருக்கானுங்க?  ஏரியா லிமிட்ல எத்தனை  போலீஸ் ஸ்டேஷன் இருக்கு? எந்தெந்த இடத்தில செக் போஸ்ட் இருக்கு? யாரு தாசில்தாரு, ஆர்டிவோ யாரு? ரெவின்யு டிபார்ட்மெண்ட் யாரு?  யாரு கலெக்டர்? மாவட்டத்தோட மந்திரி யாரு?  அந்த மந்திரி எந்த கோஸ்டில இருக்காரு எல்லா விவரமும் ஆறுமுகசாமியின் விரல் நுனில இருக்குமாம்.

இப்படி தமிழகத்தின் கஜானாவாக திகழ்ந்த மணல் மாஃபியா ஆறுமுகசாமி, லாட்டரி மோசடி குடும்பத்தின் தலைவி லாட்டரி லீமா மார்டின் என கொள்ளை கும்பல் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின் மீண்டும் தலை காட்டியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!