
மத்திய சென்னை பாமக வேட்பாளர் சாம் பாலை ஆதரித்து சூளைமேட்டில் அன்புமணி ராமதாஸ் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அவருடம் தமிழக அமைச்சர் ஜெயகுமாரும் சாம் பாலை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது சென்னை சூளைமேடு பகுதியில் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரக் கூட்டத்தில் ஸ்பீக்கர் ஒன்று ஒரு வயதான மூதாட்டியின் காலில் விழுந்தது.
இதையடுத்த வலியால் துடித்த அந்த மூதாட்டியின் குரலை கேட்டு அங்கு பிரச்சாரத்திற்கு வந்து இருந்த அமைச்சர் ஜெயக்குமார் வேனில் இருந்து இறங்கி ஓடி சென்று ஸ்பீக்கரை அகற்றினார்.
இதையத் தொடர்ந்து அந்த மூதாட்டிக்கு முதல் உதவி செய்ததோடு அவரது கர்ச்சிப்பால் அந்த மூதாட்டியின் காலில் கட்டி விட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
அமைச்சரின் இந்த திடீர் உதவி அங்கிருத் பொது மக்களை நெகிழ்ச்சி அடையச் செய்தது.