நிலவேம்பு கசாயம் வழங்கப்படுவது ஏன்? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்..!

 
Published : Oct 20, 2017, 11:47 AM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
நிலவேம்பு கசாயம் வழங்கப்படுவது ஏன்? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்..!

சுருக்கம்

minister jayakumar explanation

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த விநியோகிக்கப்படும் நிலவேம்பு கசாயம் தொடர்பாக பல்வேறு கேள்விகளும் சந்தேகங்களும் எழுப்பப்படுகின்றன.

நிலவேம்பு கசாயம் அதிகமாக குடித்தால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் என்ற கருத்து எழுந்துள்ளது. மேலும் நிலவேம்பு கசாயம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. போதாக்குறைக்கு நிலவேம்பு கசாயம் விநியோகிக்காமல், டெங்குவைக் கட்டுப்படுத்த மற்ற பணிகளை மேற்கொள்ளுமாறு தனது ரசிகர்களுக்கு கமல் அறிவுறுத்தினார். கமலின் இந்த கருத்து மேலும் சர்ச்சையைக் கிளப்பியது.

கமலின் இந்த கருத்து சித்த மருத்துவர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஆங்கில மருத்துவத்தை விட சிறந்தது சித்த மருத்துவம் என்றும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து டெங்கு தாக்காமல் பாதுகாப்பதற்காகவே நிலவேம்பு கசாயம் விநியோகிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!