மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

 
Published : Oct 20, 2017, 10:49 AM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சுருக்கம்

DMK district secretaries meeting

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை சுமார் 10 மணியளவில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டம் கட்சியின் செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு, பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும என்று ஆளுநரைச் சந்தித்து திமுகவினர் வலியுறுத்தினர்.

ஆனால், ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்காததை அடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணையில் உள்ளது.

இந்த நிலையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தல் மற்றும் டெங்கு குறித்து
விவாதிக்கப்படுமட என தெரிகிறது.

டெங்கு பாதிப்பு குறித்து மாவட்ட செயலாளர்களிடம், மு.க.ஸ்டாலின் கேட்க உள்ளதாகவும், டெங்கு பாதிப்பை போக்கக்கோரி திமுக சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!