மத்திய அரசை  விமர்சனம்  செய்தால் இந்துக்கள்  மெர்சலாயிடுவாங்க !! போட்டுத் தாக்கிய இல.கணேசன் !!!

 
Published : Oct 20, 2017, 09:38 AM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
மத்திய அரசை  விமர்சனம்  செய்தால் இந்துக்கள்  மெர்சலாயிடுவாங்க !! போட்டுத் தாக்கிய இல.கணேசன் !!!

சுருக்கம்

ila ganesan press meet at madurai about mersal

மத்திய அரசை  விமர்சனம் செய்தால் இந்துக்கள் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க மாட்டார்கள் என்றும் மெர்சலாகி விடுவார்கள் என்றும் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் அண்மையில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் தூய்மை இந்தியா போன்ற மத்திய அரசின் திட்டங்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து, நடிகர் விஜய் வசனம் பேசியுள்ளார்.

இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் விஜய்க்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

அந்த வசனத்தை நீக்காவிட்டால் நடிகர் விஜய் மீது வழக்கு தொடரப்போவதாக தமிழிசை தெரிவித்திருந்தார்,

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைந்தாலும் வரவேற்பதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் போக்குவரத்து பணிமனைகள் மட்டுமல்லாமல் பேருந்துகளும் பலமாக இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூடினார்.

விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தில், மத்திய அரசுக்கு எதிராக பேசப்படும் வசனங்கள் குறித்து கருத்து தெரிவித்த இல.கணேசன், மத்திய அரசை  விமர்சனம் செய்தால் இந்துக்கள் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க மாட்டார்கள் என்றும் மெர்சலாகி விடுவார்கள் என்றும் தெரிவித்தார்.

 

 

 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!