சிவன் கோவில் மீது கட்டப்பட்டதா தாஜ் மகால் ? மீண்டும் சர்ச்சையைக் கிளப்பும் வினய் கட்டியார் !!!

 
Published : Oct 20, 2017, 09:11 AM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
சிவன் கோவில் மீது கட்டப்பட்டதா தாஜ் மகால் ? மீண்டும் சர்ச்சையைக் கிளப்பும் வினய் கட்டியார் !!!

சுருக்கம்

taj mahal ...vinay kattiyar speech

தெஜோ மகால் என்று அழைக்கப்பட்ட சிவன்கோவில்தான் தாஜ்மகால்  என்றும், அதன்மீதுதான் ஷாஜகான் தன் மனைவிக்கு கல்லறை எழுப்பி உள்ளார் என்றும் கருத்துத் தெரிவித்து மீண்டும் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

ஆக்ராவில் யமுனை ஆற்றங்கரையில் கட்டப்பட்டுள்ள  தாஜ்மகால், உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 14 குழந்தைகளை பெற்றெடுத்த பின்னர் மறைந்த தனது மனைவி மும்தாஜ் மீது கொண்ட காதலை கவுரவித்து, அவர் நினைவாக மொகலாய மன்னர் ஷாஜகான் எழுப்பியதுதான் இந்த தாஜ்மகால்..

இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜக  மூத்த தலைவர் வினய் கட்டியார் எம்.பி., கூறிய கருத்துகள் புதிய சர்ச்சையை உருவாக்கி உள்ளன.

தெஜோ மகால் என்று அழைக்கப்பட்ட சிவன்கோவில்தான் தாஜ்மகால் என்றும் அதன்மீதுதான் ஷாஜகான் தன் மனைவிக்கு கல்லறை எழுப்பி உள்ளார் என்றும் தெரிவித்துள்ள வினய் கட்டியார்,  அதே நேரத்தில் இந்த அளவுக்கு உலக அதிசயங்களில் ஒன்றாகி, பிரபலமாகியுள்ள தாஜ்மகாலை இடித்து தள்ள விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சிவன்கோவிலை கட்டியவர்கள் இந்து மன்னர்கள்தான், தாஜ்மகாலில் உள்ள அறைகள், சிற்பங்கள் அவை இந்து நினைவுச்சின்னம் என்பதை நிரூபிக்கிற வகையில் உள்ளன, இதை  வரலாற்று ஆசிரியர் பி.என். ஓக் குறிப்பிட்டுள்ளார் என்றும் வினய் கட்டியார் தெரிவித்துள்ளார்..

தாஜ்மகால் நமது இந்துக்கோவில்தான். அதிக அதிகாரம் படைத்தவர்களால் அதன்மீது கல்லறை கட்டப்பட்டு விட்டது என்று கருத்துத் தெரிவித்து வினய் கட்டியார் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!