இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 எப்போது கிடைக்கும் ? அமைச்சர் சொன்ன குட் நியூஸ் !

Published : May 17, 2022, 01:22 PM IST
இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 எப்போது கிடைக்கும் ? அமைச்சர் சொன்ன குட் நியூஸ் !

சுருக்கம்

கூட்டுறவு துறை, நெடுஞ்சாலைத் துறைகளில் 5 ஆயிரம் பணியிடங்கள் ஆறு மாதங்களில் எந்தவித இடையூறுமின்றி தகுதியானவர்களை கொண்டு நிரப்பப்படும். 

திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்கக் கூட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, தேனி அல்லிநகரத்தில் மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

'இன்னும் ஓராண்டில் மத்தியில் ஆட்சி மாற்றம் வந்த பிறகு நகராட்சி , பேரூராட்சிகளில் 100 நாள் வேலை திட்டம் கொண்டு வரப்படும்.  கூட்டுறவு துறை, நெடுஞ்சாலைத் துறைகளில் 5 ஆயிரம் பணியிடங்கள் ஆறு மாதங்களில் எந்தவித இடையூறுமின்றி தகுதியானவர்களை கொண்டு நிரப்பப்படும். 

சத்துணவு பணியாளர் பணியிடங்களும் நிரப்பப்படும். அனைவருக்கும் வேலைவாய்ப்பினை  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்க உள்ளார். தேர்தல் வாக்குறுதியாக பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நிதி உதவி தொகை வழங்கும் திட்டத்தின் படி, கட்டாயம் நிதி உதவி வழங்கப்படும்.  அதிமுக  தலைமை இல்லாத கட்சி. அந்த கட்சி இனி காணாமல் போய்விடும். 20 ஆண்டுகளுக்கு திமுக தான் ஆட்சி அமைக்கும்' என்றார். 

இதையும் படிங்க : சீனர்களுக்கு 250 விசா வாங்கி கொடுத்த கார்த்தி சிதம்பரம்.! சிபிஐ ரெய்டு குறித்து வெளியான ‘பகீர்’ தகவல் !

இதையும் படிங்க : ஜெயலலிதா சிறைக்கு போனது முக்கிய காரணம்.! அரசின் நிதி நிலைமைக்கு புது காரணம் சொன்ன பிடிஆர் !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!