அனைத்து ஏரிகளையும் தூர்வார ட்ரிபிள் ஆர் திட்டம்.. 5 ஆண்டில் 1000 தடுப்பனைகள்.. துரைமுருகன் அதிரடி சரவெடி.

Published : May 17, 2022, 01:00 PM IST
அனைத்து ஏரிகளையும் தூர்வார ட்ரிபிள் ஆர் திட்டம்.. 5 ஆண்டில் 1000 தடுப்பனைகள்.. துரைமுருகன் அதிரடி சரவெடி.

சுருக்கம்

அதிமுக ஆட்சி குடிமராமத்து பணிகள் நடைபெற்றன என்பது கேள்விக்குறி தான் என தெரிவித்த அவர், அந்தப் பணிகளை திமுக செய்து வருவதாக கூறினார் அதேபோல் எல்லா ஏரிகளையும் தூர் வாருவதற்கு என ட்ரிபிள் ஆர் என்ற திட்டம் இருப்பதாகவும் அதனை தமிழக அரசு செய்ய உள்ளதாகவும் கூறினார். 

அனைத்து ஏரிகளையும் தூர்வார ட்ரிபிள் ஆர் என்ற திட்டம் வைத்திருப்பதாக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த ஓராண்டு கொரோனா வெள்ளத்திலேயே பாதி சென்று விட்டது என்றும், இனிவரும் காலங்களில் அத்தியாவசிய பணிகளில் கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையிலான உணர்வு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அதனை கடந்த 12ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்நிலையில் அதை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் நேரில்  பார்வையிட்டார். அவருடன் மக்கள் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் உடனிருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் ஒரு சாதாரண இடத்தை மிக அற்புதமான பூங்காவாக மாற்றியுள்ளனர். இது ஒரு சாதாரண பூங்காவாக இல்லாமல் உணர்வு பூங்காவாக மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பூங்காவை எனது பேரக் குழந்தைகள் வந்து பார்த்து விட்டு என்னையும் சென்று பார்க்கவேண்டும் என பரிந்துரைத்தனர் அதனாலேயே நான் இந்த பூங்காவை பார்க்க வந்திருக்கிறேன். உங்க பூங்கா மிகவும் அற்புதமாக உள்ளது. 2.23 கோடி ரூபாய் செலவில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் பூங்காவை ஏற்படுத்த வேண்டும் என கோரினோம், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, திமுக ஆட்சிக்கு வந்த பாதி நாட்கள் வெள்ளம் ஒரு நாளிலேயே கடந்துவிட்டது. திமுகவின் ஓர் ஆண்டு ஆட்சியை அதிமுகவினர் புகார் செய்வார்கள் என கிண்டலாகப் பேசிய துரைமுருகன் எதிர்க்கட்சி என்பதால் அவர்கள் விமர்சனம் தான் செய்வார்கள் என்றார்.

அதிமுக ஆட்சி குடிமராமத்து பணிகள் நடைபெற்றன என்பது கேள்விக்குறி தான் என தெரிவித்த அவர், அந்தப் பணிகளை திமுக செய்து வருவதாக கூறினார் அதேபோல் எல்லா ஏரிகளையும் தூர் வாருவதற்கு என ட்ரிபிள் ஆர் என்ற திட்டம் இருப்பதாகவும் அதனை தமிழக அரசு செய்ய உள்ளதாகவும் கூறினார். அதேபோல் அடுத்த 5 ஆண்டுகளில் 1,000 தடுப்பணைகள் கட்டப்படும் என்றும் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் இந்த ஆண்டு 120 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 
 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: ஜூனில் வரவு, ஜூலையில் ஜாக்பாட்.! இன்னும் 30 நாட்களில் கிடைக்க போகும் ரூ.2,500 சர்ப்ரைஸ்.!
Vijay's Gold Scheme: கல்யாணத்துக்கு 8 கிராம் தங்கம், குழந்தை பிறந்தா மோதிரம்! எப்போ கிடைக்கும் தெரியுமா?