சீனர்களுக்கு 250 விசா வாங்கி கொடுத்த கார்த்தி சிதம்பரம்.! சிபிஐ ரெய்டு குறித்து வெளியான ‘பகீர்’ தகவல் !

By Raghupati RFirst Published May 17, 2022, 12:49 PM IST
Highlights

Karti Chidambaram : மத்தியில் பாஜக ஆட்சி தொடங்கியதில் இருந்து, எதிர்கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறது. 

காங்கிரஸ் எம்பியும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் வீடு மற்றும் சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறது. மத்தியில் பாஜக ஆட்சி தொடங்கியதில் இருந்து, எதிர்கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறது. 

அந்த வகையில் காங்கிரஸ் மூத்த தலைவரும் தற்போதைய எம்பியுமான ப.சிதம்பரம் வீடு அலுவலகம் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் இதுவரை 5 முறை சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். மேலும் கடந்த 2019-ம் ஆண்டு ப.சிதம்பரத்திற்கு சிபிஐ லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான சிபிஐயிடம் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்தநிலையில்  சீனர்களுக்கு விசா வாங்கி தர ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  

சுமார் 250 விசாக்கள் வாங்கி தருவதற்காக லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்துள்ளது.  2010 முதல்  2014 வரை சீனர்கள் இந்தியா வருவதற்கு சட்டவிரோதமாக 250 விசாக்கள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.  கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான 9 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  சென்னை, மும்பை, ஒடிசா, கர்நாடகா, பஞ்சாப் உள்ளிட்ட இடங்களில் 4 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடைபெற்று வருகிறது. 

இதையும் படிங்க : ஜெயலலிதா சிறைக்கு போனது முக்கிய காரணம்.! அரசின் நிதி நிலைமைக்கு புது காரணம் சொன்ன பிடிஆர் !

இதையும் படிங்க : ஒரு மணி நேரத்துக்கு 20 ஆயிரம்.. சென்னையில் கொடி கட்டி பறக்கும் பாலியல் தொழில் - சிக்கிய ஒடிசா கும்பல் !

click me!