ஒரு மணி நேரத்துக்கு 20 ஆயிரம்.. சென்னையில் கொடி கட்டி பறக்கும் பாலியல் தொழில் - சிக்கிய ஒடிசா கும்பல் !
பாலியல் தொழிலுக்கு என சென்னை உள்பட இந்தியா முழுவதும் ஒரு நெட்வொர்க்கையே உருவாக்கி கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்த ஒடிசா மாநில இளைஞர்களை, போலீசார் கைது செய்தனர்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜோதி ரஞ்சன் ஜெனா (எ) ராகுல். 30. கிருஷ்ணா சந்திரா ஸ்வைன், 27. சினிமாவில் நடிக்க வைப்பதாகவும், இவர்களுக்கு ஆசை காட்டியுள்ளனர். இதற்கென பிரத்யோகமாக வாட்ஸ்அப் எண்ணை கொடுத்து அதன் மூலம் தங்களை தொடர்பு கொள்பவர்களிடம், தங்களிடம் இருக்கக்கூடிய பெண்களுடைய ஆபாச புகைப்படத்தை அனுப்பி வாடிக்கையாளர்களை கவர்ந்து இருக்கிறார்கள்.
அதன் பின்பாக சென்னையில் உள்ள கிண்டி, நுங்கம்பாக்கம், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கூடிய சர்வீஸ் அபார்ட்மெண்ட்கள் மற்றும் பிரபலமான ஹோட்டல்களில் ஆன்லைன் மூலமாக அறைகளை புக் செய்து விபச்சாரத்தை நடத்தி வந்துள்ளனர். குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்துக்கு 20 ஆயிரம் என ஆரம்பித்து 30 லட்சம் வரை விபச்சாரத்தை நடத்தி வந்துள்ளது தெரியவந்தது. சமூக வலைதளங்கள் வாயிலாக, வாடிக்கையாளர்களுக்கு வலை விரித்து, வெளிமாநில பெண்களை வைத்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளனர்.
இவர்கள் மீது சென்னை முழுவதும் உள்ள காவல் நிலையம் மற்றும் விபச்சார தடுப்பு பிரிவில் 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால், ஒடிசாவில் இருந்து கொண்டே சமூகவலைதளம் மூலமாக பாலியல் தொழில் செய்து வந்ததால் இவர்களை பிடிக்க முடியாமல் சென்னை போலீசார் கடந்த 10 ஆண்டுகளாக மேலாக தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் மத்திய குற்றப் பிரிவு போலீசார், நேற்று முன்தினம் கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்து புழல் சிறையில் அடைத்தனர்.