பொதுமக்களுக்கு குஷியான செய்தி... பொங்கல் பரிசை அறிவித்தார் அமைச்சர் காந்தி..!

By Thiraviaraj RMFirst Published Jul 1, 2021, 3:27 PM IST
Highlights

வழக்கமாக பொங்கல் பண்டிகையை ஒட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 ரொக்கம் மற்றும் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும். 

தமிழகத்தில் பொங்கல் பரிசை அறிவித்துள்ளார் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி.

ஈரோட்டில் இது குறித்து அவர் கூறுகையில், ‘’தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழக்கப்பட்டு வருகிறது.

இவை மிகவும் தரமாக வழங்கப்பட வேண்டும். புதிய ரக உற்பத்திகாக வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி, வேட்டி, சேலைகள் உற்பத்தி செய்ய வேண்டும். வரும் பொங்கலுக்கு புதிய தரத்தில், சிறந்த வடிவில் வேட்டி, சேலைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உடைகள் இனிமேல் மிகுந்த தரத்துடன் உற்பத்தி செய்ய வேண்டும்.

இதற்காக புதிய தரக் கட்டுப்பாட்டு வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒவ்வொரு முறை நூல் பதனிடும் போதும், துணிகள் உற்பத்தி செய்யப்படும் போதும் துணியின் தரம் பரிசோதிக்கப்பட வேண்டும். ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டுள்ள துணிகளின் தரத்தையும் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம்’’என்று தெரிவித்தார்.

வழக்கமாக பொங்கல் பண்டிகையை ஒட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 ரொக்கம் மற்றும் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும். இதையடுத்து இலவச வேட்டி, சேலை வழங்கப்படுகிறது. இதனை பெரும்பாலானோர் பயன்படுத்தாமல் வேறு வேலைகளுக்கு உபயோகப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தரமான துணிகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு தமிழக மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 

click me!