கூடங்குளத்தில் அணுக்கழிவு மையத்தை அமைக்க கூடாது.. அலறியடித்து ஓடி முதல்வரை சந்தித்த உதயகுமார்.

By Ezhilarasan BabuFirst Published Jul 1, 2021, 2:26 PM IST
Highlights

கூடங்குளத்தில் அணு உலைகளையும் அணு கழிவு மையத்தை தடுத்து நிறுத்த மத்திய அரசை வலியுறுத்த வேண்டுமென்று தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினிடம் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்


 

கூடங்குளத்தில் அணு உலைகளையும் அணு கழிவு மையத்தை தடுத்து நிறுத்த மத்திய அரசை வலியுறுத்த வேண்டுமென்று தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினிடம் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம்  தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அணு உலை போர்ட்ட குழுவின் ஒருங்கிணைக்காளர் சுப. உதயகுமார், அணு உலையை மூட வேண்டும் என்ற கோரிக்கையை ஆட்சியாளர்களிடம் வலியுறுத்தி வருகிறார். ஆனாலும் இதுவரை அதன்மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனாலும் தொடர்ந்து அதற்கான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், மேலும் கூடுதல் அணு உலைகள் கூடங்குளத்தில் அமைக்கப்படும் என தகவல் வெளியாகி வருவது அப்பகுதி மக்களை பீதியடைய வைத்துள்ளது. இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில்  முதல்வரை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் இயக்கத்தினர் கூடங்குளத்தில் அறவழி போறாட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் மீது  போடப்பட்ட வழக்குகளை திரும்பபெற்ற முதல்வர்க்கு நன்றி தெரிவிப்பதாக கூறினர். இது தொடர்பாக பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், அவற்றை திரும்ப பெற வேண்டுமென முதல்வர் கவனத்திற்குகொண்டுவந்ததாகவும் கூறினர். 

இந்த வழக்குகளால் பலர் பாஸ்போர்ட் பெற முடியாமல், வெளி நாடுகளுக்கு வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். கூடங்குளத்தில் 5,மற்றும் 6 வது அணு உலைகள் அமைக்க கான்கிரீட் போடப்பட்டுள்ளதாகவும், அதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், அணுக்கழிவு மையத்தை அமைக்க அனுமதிக்ககூடாது என முதல்வரை வலியுறுத்தி கேட்டுகொண்டதாகவும் கூறினார். 

 

click me!