தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திமுக வெறும் 5 அணைகளை மட்டுமே கட்டியிருப்பதாக அண்ணாமலை தவறான குற்றச்சாட்டை முன்வைத்திருப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அமைச்சர் துரைமுருகன் திமுக 40-க்கும் மேற்பட்ட அணைகள் கட்டியிருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். கொங்கு பகுதியில் 5 அணைகள் என்று நான் குறிப்பிட்டுக் கூறியதை அவர் கவனிக்க மறந்துவிட்டார் என அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திமுக வெறும் 5 அணைகளை மட்டுமே கட்டியிருப்பதாக அண்ணாமலை தவறான குற்றச்சாட்டை முன்வைத்திருப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் துரைமுருகனுக்கு பதிலளிக்கும் விதமாக, கொங்கு மண்டலத்தில் திமுக வெறும் ஐந்து அணைகளைக் கட்டியிருப்பதாகக் கூறியதாக அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில்;- தமிழக அரசியலில் மூத்த தலைவர்களில் ஒருவரும், நீண்ட நெடிய அரசியல் அனுபவம் மிக்கவருமான, திமுக பொதுச்செயலாளர், அண்ணன் அமைச்சர் துரைமுருகன் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். திமுகவினர், திமுக தலைவர் பேரனுக்கு போஸ்டர் ஒட்டுதல் முதற்கொண்டு, சாதாரண பொதுமக்கள், கடைகள் நடத்துபவர்கள், பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்துதல், பாலியல் குற்றங்களில் ஈடுபடுதல் உள்ளிட்ட எவ்வளவு பெரிய சமூக விரோதச் செயல்கள் செய்தாலும், அவர்கள் திமுகவிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்ற அறிக்கையே, வழக்கமாக அவர் பெயரில் வெளிவரும்.
இதையும் படிங்க;- 5C கொண்ட ஆட்சிதான் பாஜக ஆட்சி! ரூ.7.5 லட்சம் கோடி முறைகேடு ஏன் விவாதிக்கவில்லை? இறங்கி அடிக்கும் முதல்வர்.!
அதிலிருந்து ஒரு நல்ல மாற்றமாக, எதிர்க்கட்சியாக இருந்தும், என் மீது கொண்டுள்ள அன்பினாலும், நான் தவறான தகவல்களைத் தெரிவித்து விடக்கூடாதே என்ற அக்கறையினாலும் அண்ணன் துரைமுருகன் அவர்கள் இந்த அறிக்கையை வெளியிட்டிருப்பதாகவே நான் எடுத்துக் கொள்கிறேன். நேற்றைய முன்தினம் என் மண் என் மக்கள் நடைபயணத்தின்போது, மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதியில், கொங்கு பகுதியில் உள்ள 24 அணைகளில், திமுக வெறும் ஐந்து அணைகளையே கட்டியுள்ளது என்று பேசியிருந்தேன். அண்ணன் துரைமுருகன் அவர்கள், திமுக நாற்பதுக்கும் மேற்பட்ட அணைகள் கட்டியிருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். கொங்கு பகுதியில் ஐந்து அணைகள் என்று நான் குறிப்பிட்டுக் கூறியதை அவர் கவனிக்க மறந்துவிட்டார்.
இதையும் படிங்க;- வம்பில் மாட்டிக் கொள்வதையே பொழப்பாக வைத்திருக்கும் நண்பர் அண்ணாமலை! நான் சொல்ற ஒரு யோசனை இதுதான்! துரைமுருகன்
புள்ளி விவரங்களை விரல் நுனியில் வைத்து விளையாடும் அண்ணன் துரைமுருகன் அவர்கள், அவசரகதியில், இந்த சிறிய தகவலைச் சரிவர கவனிக்காமல் கோட்டை விட்டுவிட்டாரே என்பது வருத்தத்தைத் தருகிறது.
மேலும் திமுக கட்டியதாக அவர் குறிப்பிட்டுள்ள அணைகளில் பல, அதிமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டவை என்று தமிழக அரசு இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றையும் திமுகவினர் திருத்த மறந்துவிட்டார்கள் என்பது, அண்ணன் துரைமுருகன் போன்ற மூத்த அமைச்சர்களை வேண்டுமென்றே முன்நிறுத்தி பின் நின்று விளையாடுகிறார்களோ என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது என அண்ணாமலை கூறியுள்ளார்.