டெங்கு இல்லாதவர்கள் விஜயபாஸ்கருக்கு நன்றி சொல்லுங்க..! மறைமுகமாக வலியுறுத்தும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்..!

 
Published : Oct 14, 2017, 10:45 AM ISTUpdated : Sep 19, 2018, 01:18 AM IST
டெங்கு இல்லாதவர்கள் விஜயபாஸ்கருக்கு நன்றி சொல்லுங்க..! மறைமுகமாக வலியுறுத்தும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்..!

சுருக்கம்

minister dindigul srinivasan said on dengue

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதுக்கோட்டையில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் புகைப்படக் கண்காட்சியை திறந்துவைத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ரத்த பரிசோதனை மையத்தையும் திறந்துவைத்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், டெங்கு பரிசோதனை செய்ததில் எனக்கு டெங்கு இல்லை என தெரியவந்துள்ளது. எனவே சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என தெரித்தார்.

தனக்கு டெங்கு இல்லாததற்கு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நன்றி சொல்வதன்மூலம், டெங்கு இல்லாதவர்கள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நன்றி சொல்ல வேண்டும் என திண்டுக்கல் சீனிவாசன் கூறுகிறாரா? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

டெங்கு விஷயத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகள் போதாது என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திலிருந்து விடுபடுவதற்காகவும் சுகாதாரத்துறை சிறப்பாக செயல்படுகிறது என்பதை எடுத்துக்கூறும் விதமாகவும் கருத்து கூறுவதாக நினைத்துக்கொண்டு மீண்டும் ஒருமுறை வாயைக் கொடுத்து மாட்டிவிட்டார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

டெங்கு இல்லாதவர்கள் நன்றி கூறுவது இருக்கட்டும்.. டெங்கு இருப்பவர்களை குணமாக்கி அவர்களை நன்றி கூறவையுங்கள் என மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
 

PREV
click me!

Recommended Stories

நிலவு போல தான் விஜய்..! விரைவில் மறைந்து போவார்..! திமுகவில் இணைந்த EX மேலாளர் பி.டி.செல்வகுமார் ஆவேசம்..!
தந்தை தரப்பை கதறவிடும் அன்புமணி.. 14ம் தேதி முதல் பாமகவில் விருப்பமனு விநியோகம்..