அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வயதானவர்.. அவரால் குனியக்கூட முடியாது... எடப்பாடியின் அடடே விளக்கம்..!

By vinoth kumarFirst Published Feb 8, 2020, 4:38 PM IST
Highlights

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வயதானவர். காலில் சிக்கிய குச்சியை எடுக்க உதவிக்கு சிறுவனை அழைத்துள்ளார். குனிந்து எடுக்க முடியவில்லை என்பதால் பேரன் வயதில் இருந்த சிறுவனை உதவிக்கு அழைத்தாக அமைச்சர் விளக்கம் கொடுத்துள்ளார். அமைச்சர் அந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.இதை ஊடகங்கள் பெரிதாக வெளியிடுவது வருத்தம் அளிக்கிறது என்றார். 

வயது முதிர்வு காரணமாக கீழே குனிய முடியாததால், சிறுவனை உதவிக்கு அழைத்ததாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனே கூறியுள்ளார் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

கோவை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- சேலம் தலைவாசல் பகுதியில் ஆசியாவிலேயே கால்நடை பூங்கா அடிக்கல் நாட்டு விழா, கால்நடை மருத்துவகல்லூரி அடிக்கல் நாட்டு விழா போன்ற நிகழ்வுகளில் பங்கேற்க வந்துள்ளேன். டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது தேர்வாணையம் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வயதானவர். காலில் சிக்கிய குச்சியை எடுக்க உதவிக்கு சிறுவனை அழைத்துள்ளார். குனிந்து எடுக்க முடியவில்லை என்பதால் பேரன் வயதில் இருந்த சிறுவனை உதவிக்கு அழைத்தாக அமைச்சர் விளக்கம் கொடுத்துள்ளார். அமைச்சர் அந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.இதை ஊடகங்கள் பெரிதாக வெளியிடுவது வருத்தம் அளிக்கிறது என்றார். 

வறட்சி என்ற சொல்லே இந்த ஆண்டு இல்லை. நல்ல மழை பெய்து குளங்கள் நிரம்பி இருக்கின்றது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது என்ன குற்றச்சாட்டு இருக்கின்றது என தெரியவில்லை. அவர் ஒரு பக்தி மான். அவர் சொந்த கருத்தை சொல்லி இருக்கின்றார். அது அதிமுகவின் கருத்துகிடையாது என்பதையும் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கியுள்ளார் என்றார். 

பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக முதல்வர் கூறுகையில்;- மாணவனின் தகுதியை நிர்ணயம் செய்வதுதான் தேர்வு. தேர்வே எழுதாமல் அனைவரும் பாஸ் செய்து விட்டால் அவருடைய தகுதி என்ன என்பது யாருக்கும் தெரியாமல் போய் விடும் என்றார். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடர்பாக முதல்வர் எடப்பாடி கூறியுள்ள கருத்துக்கு நெட்டிசன்கள் சசிகலா காலில் விழும் போது மட்டும் வயது முதிர்வு தெரியவில்லையா என கேள்வி எழுப்பி வருகின்றனர். 

click me!