தமிழக அரசியல் களத்தை அதிரவைத்த திமுக...!! ஸ்டாலினுக்கு 2 கோடி பேர் ஆதரவு...!!

By Ezhilarasan BabuFirst Published Feb 8, 2020, 3:55 PM IST
Highlights

ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெறுவது என திட்டமிடப்பட்ட நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் நேரடியாக களத்தில் இறங்கி மக்களிடம் கையொப்பம் பெற்றார் .

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சுமார் இரண்டு கோடி பேர் கையெழுத்திட்டுள்ளதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .  இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பாஜக மிஸ்டுகால் முறையில் ஆதரவு திரட்டி வரும் நிலையில் திமுக கையெழுத்து இயக்கம் நடத்தி இந்திய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சுமார் 2 கோடி பேரிடம் கையொப்பம் பெற்றுள்ளது .  மத்திய அரசு  கொண்டு வந்துள்ள இந்திய குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது .  இது இஸ்லாமியர்களை குறிவைத்து கொண்டுவரப்பட்டுள்ள சட்டம்  எனக்கூறிய மக்களின் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் .

இச்சட்டத்துக்கு எதிராக கேரளா மேற்கு வங்கம் பஞ்சாப்  உள்ளிட்ட மாநிலங்கள் சட்டமன்றத்திற்கு கூட்டு சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.   அதுமட்டுமில்லாமல் பாஜக அல்லாத மாநிலங்களில் இச்சட்டத்துக்கு கடுமையான  எதிர்ப்பு நிலவி வருகிறது .  இந்நிலையில் திரைப்பட பிரபலங்கள் மூலம் இச்சட்டத்தை மக்கள் மத்தியில் எடுத்துக்கூறி ஆதரவு பெறும் நடவடிக்கையில் பாஜக இறங்கியுள்ளது இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக மக்களின் ஆதரவைத் திரட்ட திமுக கூட்டணி சார்பில் முடிவு செய்யப்பட்டு  கையொழுத்து பெறப்பட்டது,  ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெறுவது என திட்டமிடப்பட்ட நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் நேரடியாக களத்தில் இறங்கி மக்களிடம் கையொப்பம் பெற்றார் .  

திமுகவின் இந்த கையெழுத்து இயக்கத்தை கடுமையாக விமர்சித்த பாஜக  கையெழுத்து வாங்கி  மக்களின் சொத்துக்களை எழுதி வாங்க திமுக திட்டமிட்டு வருகிறது ,  அதேபோல் கையெழுத்து வாங்கிய காகிதங்கள் தேனீர் கடையில் பஜ்ஜி போண்டா மடிக்க பயன்படும் காகிதங்களாக உள்ளது என்றெல்லாம் பாஜக தரப்பில் வதந்திகள் பரப்பப்பட்டு வந்தாலும் இச்சட்டத்தை எதிர்த்து பொதுமக்கள் ஆர்வத்துடன் கையொப்பமிட்டு வருகின்றனர் .  இந்நிலையில் கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்ற  மு க ஸ்டாலின் இடம் செய்தியாளர்கள் சந்தித்தனர்.  அப்போதும் பேசிய அவர்.   

வேலைவாய்ப்பின்மையை திசை திருப்பவே குடியுரிமை திருத்த சட்டத்தை பாஜக கொண்டு வந்துள்ளது.  சிரியாவுக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்துஇட வேண்டும் என்றுதான் ஆரம்பத்தில் முடிவு செய்தோம் ஆனால் இந்த கையெழுத்து இயக்கத்தில்  தற்போது இரண்டு கோடி பேர் கையொப்பமிட்டுள்ளனர் இந்தக் கையொப்பத்தின் நகல்களை இன்னும் ஐந்து நாட்களில் குடியரசு தலைவரிடம் ஒப்படைக்கப்படும் என் ஸ்டாலின் தெரிவித்தார்.  

click me!