ரஜினி யார் என்பது தெரியும்... உயிரே போனாலும் விடமாட்டேன்... கொக்கரிக்கும் கரூர் ஜோதிமணி..!

Published : Feb 08, 2020, 04:33 PM IST
ரஜினி யார் என்பது தெரியும்... உயிரே போனாலும் விடமாட்டேன்... கொக்கரிக்கும் கரூர் ஜோதிமணி..!

சுருக்கம்

ரஜினிகாந்த் பாஜககாரர் என்பது அவரை தவிர அனைவருக்கும் தெரியும் என, கரூர் மக்களவை காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி தெரிவித்துள்ளார்.  

ரஜினிகாந்த் பாஜககாரர் என்பது அவரை தவிர அனைவருக்கும் தெரியும் என, கரூர் மக்களவை காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி மதச்சார்பற்ற முற்போக்கு கூட் டணி சார்பில் கையெழுத்து இயக்கம் கடந்த 2-ம் தேதி தொடங்கப்பட்டது. இறுதி நாளான இன்று திமுக மாவட்ட பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ.,வுமான வி.செந்தில்பாலாஜி, கரூர் எம்.பி. ஜோதிமணி ஆகியோர் கரூர் ஜவஹர்பஜாரில் வியாபாரிகளிடம் கையெழுத்து பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய ஜோதிமணி, "மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டத்தின் கீழ் தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ளக்கூடாது. அப்படி மேற்கொண்டால் அதற்காக என் உயிரையும் கொடுத்தும் அதனை தடுப்பேன். 85 பக்க பட்ஜெட் உரையில் வேலையின்மை பிரச்சினை குறித்து எதுவும் இடம்பெறவில்லை. பிரதமர் உரையிலும் வேலையின்மை பற்றி குறிப்பிடவில்லை. 45 ஆண்டுகளில் இல்லாத வேலையின்மை பிரச்சினை தற்போது ஏற்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் ஒரு கந்துவட்டிக்காரர். அவர் பாஜககாரர் என்பது அவரை தவிர அனைவருக்கும் தெரியும். பாஜகவின் கொள்கைகளுக்கு மக்களிடம் எதிர்ப்பு எழும் போதெல்லாம் அவர் குரல் கொடுப்பார். தமிழக மக்கள் பிரச்சினைக்காக அவர் ஒரு போதும் குரல் கொடுத்ததில்லை." என்றார்.
 

PREV
click me!

Recommended Stories

பேமிலி, பிரெண்ட்ஸ் வாட்ஸ்ஆப் குரூப்களில் கூட விஷம் பரப்பும் மதவாதிகள்.. அலெர்ட் கொடுக்கும் முதல்வர்..
நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு