முதன்முதலாக தொகுதிக்கு வந்த அமைச்சர்…பொது மக்கள் துரத்தியதால் அதிர்ச்சி…

 
Published : Mar 19, 2017, 08:10 AM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
முதன்முதலாக தொகுதிக்கு வந்த அமைச்சர்…பொது மக்கள் துரத்தியதால் அதிர்ச்சி…

சுருக்கம்

Minister Anbazhagan

முதன்முதலாக தொகுதிக்கு வந்த அமைச்சர்…பொது மக்கள் துரத்தியதால் அதிர்ச்சி…

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில், அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்க வந்த அமைச்சர் அன்பழகனை, தங்களது பகுதிக்கு, ஒகேனக்கல் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரி, பொதுமக்கள் முற்றுகையிட்தால் அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் அன்பழகன், தன் தொகுதியான பாலக்கோட்டில் உள்ள பேருந்து நிலையம் பகுதியில்  அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலை திறப்பதற்காக வந்தார்.

அப்போது அங்கு திரண்ட பொது மக்கள் அன்பழகனை முற்றுகையிட்டனர். தொடர்ந்த அடுக்கடுக்காக கேள்வி கேட்டு துளைத்து எடுத்தனர்.

இத்தனை நாள் தொகுதிக்கு வராமல் எங்கே போயிருந்தீர்கள்? எங்களைவிட உங்களுக்கு சசிகலாதான் முக்கியமா? தொகுதியில் நிறைவேற்றப்படாத  திட்டங்கள் குறித்து உங்களுக்கு கவலையில்லையா ? என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

அப்பகுதியில் 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டும், பெயரளவுக்கு ஒகேனக்கல் குடிநீர் வருவதாகவும், தெருக்களில் சாலை வசதி செய்து தர வேண்டும் எனவும், பொது மக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். 

இதனால் அதிர்ச்சி அடைந்த  அமைச்சர் அன்பழகன், ஒகேனக்கல் குடிநீர் தடையின்றி வழங்க பைப் அமைக்கும் பணிக்கு, 9ம் தேதி டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும், விரைவில் இந்த பணி முடிந்தபின் ஒகேனக்கல் குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்த அவர் பேசுவதை நம்பாமல் இனி தேர்தலின்போது வாக்கு கேட்டு வருப்போது நாங்கள் எங்கள் வேலையை காட்டுகிறோம் என காட்டமாக பேசினர். இதையடுத்து தொடர்ந்து அப்பகுதிக்கு செல்ல முடியாமல் அங்கிருந்த திரும்பினார்.

PREV
click me!

Recommended Stories

திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு
திமுகவை நத்தி பிழைப்பதற்காக.. நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு..! குருவுக்கு எதிராக அக்னியை கக்கும் நாஞ்சில்