இரட்டை இலை சின்னமும் அதிமுகவும் எங்களுக்குத்தான்..ஓபிஎஸ் அதிரடி பேச்சு…

 
Published : Mar 19, 2017, 06:35 AM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
இரட்டை இலை சின்னமும் அதிமுகவும் எங்களுக்குத்தான்..ஓபிஎஸ் அதிரடி பேச்சு…

சுருக்கம்

OPS press meet

இரட்டை இலை சின்னமும் அதிமுகவும் எங்களுக்குத்தான்..ஓபிஎஸ் அதிரடி பேச்சு…

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் எங்கள் அணி இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடும் என்றும் இத் தேர்தலில் நாங்கள் மகத்தான வெற்றி பெறுபோம் என ஓபிஎஸ் தெரிவித்தார்.

முன்னாள் முதலமைச்சர்  ஓபிஎஸ்  தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள தனது பண்ணை வீட்டில் செய்தியாளர்ககுக்கு பேட்டி அளித்தார். அப்போது  இரட்டை இலை  சின்னம் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம்,தங்கள் தரப்பு  நியாயமான வாதங்களை  தெரிவித்துள்ளதாக கூறினார்.

அ.தி.மு.க. மக்கள் இயக்கமாக தான் இருக்க வேண்டும் என்றும் எந்த ஒரு தனிப்பட்ட குடும்பத்தின் ஆதிக்கத்துக்குள் கட்சியும், ஆட்சியும் இருக்கக்கூடாது என்பதில் தாம் உறுதியாக இரப்பதாக ஓபிஎஸ் தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் கொள்கைகள், கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டு  தங்கள் அணிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என்றும் அதற்கு தீபா விதிக்கல்ல என்றும் அவர் கூறினார்.

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்பே இல்லை என்றும் அந்த சின்னமும், அதிமுகவும் எப்போதுமே எங்களுக்குத்தான் என்றும் பேட்டியின்போது ஓபிஎஸ் உறுதிபடத் தெரிவித்தார்.

சசிகலா அணியில் உள்ள எம்எல்ஏக்களும், அமைச்சர்களும் தன்னிடம் பேசிக் கொண்டிருப்பதாகவும் அவர்கள் விரைவில் தங்கள் அணிக்கு வருவார்கள் என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.

டி.டி.வி.தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவது கட்சியின் சட்ட விதிகளுக்கு முரணானது என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.

 

PREV
click me!

Recommended Stories

திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு
திமுகவை நத்தி பிழைப்பதற்காக.. நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு..! குருவுக்கு எதிராக அக்னியை கக்கும் நாஞ்சில்