மியா கலிபா, சன்னி லியோன்..! திமுகவில் உறுப்பினராகும் ஆபாசப்பட நடிகைகள்.. பிரச்சாரத்திற்கு வருவார்களா?

By Selva KathirFirst Published Sep 25, 2020, 11:54 AM IST
Highlights

மிஸ்டு கால் மூலம் பாஜகவினர் உறுப்பினர்களை சேர்த்ததை விமர்சித்த திமுகவினருக்கு ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை மூலம் தர்மசங்கடமான சூழல் உருவாகியுள்ளது.
 

மிஸ்டு கால் மூலம் பாஜகவினர் உறுப்பினர்களை சேர்த்ததை விமர்சித்த திமுகவினருக்கு ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை மூலம் தர்மசங்கடமான சூழல் உருவாகியுள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்காக பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் நிறுவனத்துடன் சுமார் 350 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது திமுக. அதாவது சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுக மற்றும் திமுக வேட்பாளர்களை புரமோட் செய்வது தான் ஐ பேக் நிறுவனத்தின் வேலை. அதோடு மட்டும் அல்லாமல் தேர்தல் களத்தில் திமுகவிற்கு பாசிட்டிவான விஷயங்களை ஏற்படுத்தி ஸ்டாலினை முதலமைச்சராக்குவதும் ஐபேக் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள அசைன்மென்ட். ஏற்கனவே ஐபேக் நிறுவனத்தின் ஒன்றினைவோம் வா எனும் செயல்திட்டத்தை திமுக முழு மூச்சாக செயல்படுத்தியது.

கொரோனா கால கட்டத்தில் உதவி தேவைப்படுபவர்களுக்கு அந்தந்த பகுதி திமுக நிர்வாகிகள் மூலம் உதவி செய்வது தான் ஒன்றினைவோம் வா செயல்திட்டம். இதற்கு ஓரளவிற்கு நல்ல பலன் கிடைத்தது. இந்த நிலையில் தேர்தல் நெருங்கும் சூழலில் திமுகவிற்கு ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்துள்ளது ஐ பேக் நிறுவனம். இதன்படி, திமுக உறுப்பினராக ஒருவர் ஆன்லைன் மூலமாக சேர முடியும். இதற்காக என்று பிரத்யேக இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த இணையதளத்திற்கு சென்று தங்கள் விவரங்கள் மற்றும் புகைப்படங்களை பதிவேற்றினால் இன்ஸ்டன்டாக திமுக மெம்பர் ஆகிவிடலாம்.

கடந்த வாரம் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை துவங்கிய நிலையில், மாவட்டச் செயலாளர்கள் தொடங்கி கிளைச் செயலாளர்கள் வரை அனைவருக்கும் குறிப்பிட்ட அளவில் திமுக மேலிடம் டார்கெட் கொடுத்துள்ளது. பகுதிக்கு தகுந்தாற்போல் குறிப்பிட்ட எண்ணிக்கையில் திமுகவிற்கு ஆன்லைன் உறுப்பினர்களை சேர்க்கவேண் டும் என்பது தான்.  இதற்காக கடந்த ஒரு வாரமாக திமுக மாவட்டச் செயலாளர்கள் பம்பரமாக சுழன்று உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர். ஆனால் இந்த ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையே ஒரு காமெடி என்பது போல் கூத்துகள் அரங்கேறி வருகின்றனர்.

ஏற்கனவே திமுகவில் இருப்பவர்களை மீண்டும் ஆன்லைன் மூலம் உறுப்பினர்களாக்கி கணக்கு காட்டுவதாக சில மாவட்டச்செயலாளர்கள் மீது புகார்கள் எழுந்துள்ளனர். இதே போல் புகைப்படத்தை மட்டும் பெற்று போலி முகவரி, போலி விவரங்களை கொடுத்து திமுகவில் உறுப்பினர் சேர்க்கை மோசடி நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஒரு கோடி பேர் இணையதளம் மூலம் திமுகவில் இணைந்தனர் என்கிற கணக்கை காட்ட இப்படி இரவு பகலாக பல்வேறு வழிகளில் நூதனமாக திமுக உறுப்பினர் சேர்க்கை மோசடி அரங்கேற்றப்பட்டு வருவதாக பேச்சுகள் அடிபடுகின்றன.

இந்த நிலையில் திமுக தலைமைக்கு மேலும் ஒரு தர்மசங்கடாக மு.க.அழகிரியை ஆன்லைன் மூலம் திமுகவில் சேர்த்துள்ளனர் சில உடன்பிறப்புகள். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக திமுகவில் இருந்து அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் ஆன்லைன் மூலம் மறுபடியும் திமுக உறுப்பினராகிவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் சிறகடித்து பறக்கின்றனர். இது போதாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போன்றோரை எல்லாம் கூட திமுக ஆன்லைன் மூலம் மெம்பராக்கியுள்ளது.  இந்த நிலையில் உலகை மிரட்டும் ஆபாச பட நடிகை மியா கலிபா, இந்தியாவை சேர்ந்த ஆபாச பட நடிகை சன்னி லியோன், மறைந்த நடிகை சில்க் உள்ளிட்டோரும்  ஆன்லைன் மூலம் திமுக உறுப்பினராகியுள்ளனர். திமுக ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை செயல்முறையில் உள்ள ஓட்டைகளை இது காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

 அதாவது ஆட்டோ ஜெனரேசன் முறையில் திமுக உறுப்பினருக்கான எண் வழங்கப்படுவதாக கூறுகிறார்கள். அதாவது விண்ணப்பிக்கும் அனைவரும் உறுப்பினராகும் வகையில் ஆன்லைன் இணையதள உறுப்பினர் சேர்க்கை சாப்ட்வேர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் தான் யார் பெயரில் விண்ணப்பித்தாலும் உடனடியாக அவர்களை திமுக மெம்பராக்குகிறது அந்த சாப்ட்வேர்.

இப்படி ஒரு கேலிக்கூத்தான முறையில் சேர்க்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை எப்படி சரியானதாக எடுத்துக் கொள்ள முடியும் என்று அதிமுகவினர் கிண்டல் செய்து வருகின்றனர். அத்தோடு மட்டும் அல்லாமல் திமுகவில் சேர்ந்துள்ள மியா கலிபா, சன்னி லியோன் போன்றோரை எல்லாம் பிரசாந்த் கிஷோர் தமிழகத்திற்கு பிரச்சாரத்திற்கு அழைத்து வரப்போகிறாரா என்றும் கிண்டல்கள் சூடு பறக்கின்றன. இது தொடர்பாக திமுக தலைமை கழக நிர்வாகிகளிடம் பேசிய போது, இந்த பிரச்சனையை சரி செய்ய தங்கள் தகவல் தொழில்நுட்ப குழு பணியாற்றி வருவதாக விளக்கம் அளித்தனர்.

click me!