பிரமாண்டமான எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்...!!! – அமைச்சர்கள் தீவிர ஆலோசனை....

 
Published : Jun 18, 2017, 02:15 PM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
பிரமாண்டமான எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்...!!! – அமைச்சர்கள் தீவிர ஆலோசனை....

சுருக்கம்

mgramachchandran hundred years function in madurai at tamilnadu ministers is consulting

அதிமுகவை உருவாக்கிய முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது குறித்து தமிழக அமைச்சர்கள் மதுரையில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு தொடக்க விழா மதுரையில் ஜூன் 30 ஆம் தேதி தமிழக அரசு சார்பில் நடைபெறும் என முதலல்மைச்சர் எடப்பாடி பழனிசாமி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.

அதன்படி இந்த விழா மதுரை – சிவகங்கை சாலை சந்திப்பு அருகே நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவின் ஏற்பாடுகளை தமிழக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, அன்பழகன், காமராஜ், ஒ.எஸ். மணியன், விஜயபாஸ்கர், கடப்பூர் ராஜு,  உதயக்குமார், உள்ளிட்டோர் ஆய்வு செய்து செய்தனர்.

முன்னதாக விழா மேடை மற்றும் அரங்கம் அமைய உள்ள சுற்றுச்சாலை மைதானத்தை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.

இந்நிலையில் இந்த எம்,ஜி.ஆர் நூற்றாண்டு விழா குறித்து செங்கோட்டையன், கடம்பூர் ராஜு உள்ளிட்ட 13 அமைச்சர்கள் மதுரையில் ஆலோசனை செய்து வருகின்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மதுரை ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!