
அதிமுகவுக்கு யார் தலைமை தாங்குவார் எனபதை விரைவில் தெய்வமாக இருந்து எம்ஜிஆஅர் தீர்மானிப்பார், ஆனால் என் ஆதரவு சசிகலாவுக்குத்தான் என்று எம்ஜிஆர் வளர்ப்பு மகள் சுதா தெரிவித்துள்ளார்.
அவரது பேட்டி வருமாறு:
நாளை எம்ஜிஆர் 100 வது பிறந்த நாள் , அவரது இல்லமான தோட்டத்தில் சிறாப்பான விழாவாக கொண்டாட உள்ளோம். எம்ஜிஆர் சிலையைஅ அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா திறந்து வைக்கிறார். முதல்வர் ஓபிஎஸ் கலந்து கொள்கிறார்.
நிகழ்ச்சியில் எம்ஜிஆர் பற்றிய நிறைய நிகழ்ச்சிகள் இருக்கும் எம்ஜிஆர் பாடல்கள் பாடுவார்கள் , நிறைய பேர் எம்ஜிஆர் பற்றி பேச உள்ளனர், சிறிய அளவிலான அன்னதானம் செய்வோம் இந்த ஆண்டு பெரிய அளவில் செய்கிறோம்.
தீபா அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்?
இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் வரலாம். எங்களுக்கு வந்து எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி உடைய கூடாது. எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் ஜானகி , ஜெயலலிதா இரண்டாக பிரிந்தது. பின்னர் மேடம் ஜெயலலிதா தலைமையில் ஒன்றிணைந்து சிறப்பாக இருந்தது. அதே நிலை தொடரணும். நாங்க முழு ஆதரவை சசிகலாவுக்கு தெரிவிக்கிறோம். அவங்களால கட்சியை உடையாமல் காப்பாற்ற முடியும். எங்களுக்கு தேவை கட்சி உடைய கூடாது.
கே.பி. முனுசாமி எதிர்ப்பு தெரிவிக்கிறாரே?
எனக்கு அரசியல் அவ்வளவாக தெரியாது. எங்களுக்கு தேவை கட்சி உடைய கூடாது அவ்வளவே. அதற்காகத்தான் சசிகலாவை ஆதரிக்கிறோம். எம்ஜிஆர் ஆர்ம்பித்த கட்சி உடைய கூடாது. சின்னமும் இருக்கணும் மக்களுக்கு நல்லது செய்யணும் அதுதான் காரணம்
திவாகரன் நாங்கள் தான் கட்சியை காப்பாற்றினோம் என்று கூறியுள்ளாரே?
இது ஜனநாயக நாடு, அது அவர்களோட கருத்து. எங்களுக்கு எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி உடைய கூடாது. எங்களுக்கு ஒட்டு மொத்த கட்சியும் ஒன்றாக இணைந்து சின்னம்மா அவர்களை பொதுச்செயலாளராக்கியுள்ளது. ஆகவே கட்சி உடைய கூடாது. சின்னமா அதை காப்பாற்றுவார். அதனால் எங்கள் ஆதரவு சின்னம்மாக்குத்தான்.
ஜா.ஜெ பிரிந்த போது கட்சி ஜெயிக்க வில்லை அதனால் எங்கள் அனுபபவம் என்னவென்றால் கட்சி ஒன்றாக இருக்கணும் அதுதான் முக்கியம்.
சசிகலாவுக்கு மக்கள் ஆதரவு இல்லை என்று கூறப்படுகிறதே?
அவங்களுக்கு சான்ஸ் கொடுக்கணும் இல்லையா, நாலரை ஆண்டுகாலம் என்ன செய்ய போறாங்கன்னு சான்ஸ் கொடுத்து பார்க்கணும். தேர்தல் நேரத்தில் தானாக ஆதரவு வரும்.
தொண்டர்கள் ஆதரவு இருக்கிறதா?
தொண்டர்கள் ஆதரவு இருக்கிறதா இல்லையா என்று தொண்டர்களைத்தான் கேட்கணும். என்னை பொறுத்தவரை கட்சி உடைய கூடாது அவ்வளவுதான்.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக சொல்கிறார்களே?
அது பற்றி எனக்கு தெரியாது அப்படி ஒரு ரூமர் கிளப்பி விடப்பட்டது. எனக்கு சந்தேகமில்லை. அவரது மரணத்தில் எந்த வித சந்தேகமுமில்லை எதையும் தெரியாமல் நான் சொல்ல முடியாது. என்னை பொறுத்த வரையில் நாலரை ஆண்டுகால ஆட்சி முழுமையாக பூர்த்தி அடையணும் அதுதான் என் எண்ணம்.
ஜெயலலிதாவின் உறவினர் தீபாவுக்கு ஆதரவு பெருகுகிறதே?
யார் கட்சியை வழி நடத்தி செல்வார்கள் என்று எம்ஜிஆரே தீர்மானிப்பார். ஆனால் இப்ப சின்னம்மா தான் சரியான ஆள் என்று நான் நினைக்கிறேன். அவருக்கு அரசியல் அனுபவம் உள்ளது என்று நினைக்கிறேன்.
அப்படியானால் ஓபிஎஸ்க்கு நிர்வாக திறமையில்லையா?
அனைவரும் சேர்ந்தது தான் நிர்வாகம் நான் அதைத்தான் சொல்கிறேன். இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.