அதிமுகவில் வெடித்தது அதிருப்தி - முதன் முதலில் போர்க்கொடி தூக்கினார் கே.பி.முனுசாமி

 
Published : Jan 16, 2017, 12:02 PM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
அதிமுகவில் வெடித்தது அதிருப்தி - முதன் முதலில் போர்க்கொடி  தூக்கினார் கே.பி.முனுசாமி

சுருக்கம்

அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு வலுவாக தலை தூக்கி பொதுச்செயலாளர் அந்தஸ்த்தில் எதிர்ப்பாளர் ஏதுமில்லாமல் இருந்த சசிகலாவுக்கு எதிராக முதல் குரலாக கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து வன்னியர் பெல்டிலிருந்து கே.பி.முனுசாமியின் குரலாக வெடித்துள்ளது.

நாங்கள் ஒன்றும் முந்தா நாள் பெய்த மழையில் நேற்று முளைத்த காளான்கள் அல்ல அதிமுகவின் ஆரம்ப காலம் முதலே எங்களுடைய பங்கு  உள்ளது, அண்ணன் எஸ்டிஎஸ் சுடன் சேர்ந்து தஞ்சையில் கட்சியை கட்டி காப்பாற்ற எண்ணற்ற தியாகங்கள் செய்தவர்கள் , எங்களுடைய தியாகம் மகத்தானது.

 எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு கட்சியை காப்பாற்றுவதிலும் , உடைந்த கட்சியை இணைத்து , இரட்டை இலையை மீட்டெடுத்ததிலும் நடராஜனின் பங்கு மகத்தானது  அளப்பரியது, அதிமுகவை வீழ்த்த சதி நடக்கிறது, அதை முறியடிப்போம் என்று அதிமுகவின் அனைத்தும் தானே என்பது போல் தஞ்சை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில் சசிகலாவின் தம்பியும் அதிமுகவின் முக்கிய செலவாக்கு மிக்க இடத்தில் இருப்பவருமான திவாகரனின் பேசியிருந்தார்,. 

இது மட்டுமின்றி  மன்னார் குடி பகுதியினர் தியாகம் கட்சியை கட்டி காப்பதில்  அதிகம் என்று திவாகரன் பேசிய 24 மணி நேரத்திற்குள் வெடித்துள்ளது சர்ச்சை.

கடந்த ஆட்சியின் போது ஜெயலலிதாவின் மிக மிக நம்பிக்கைக்குரிய டாப் 4 எனப்படும் நால்வர் அணியில் முக்கியமானவரான கே.பி.முனுசாமித்தான் சர்ச்சையை துவக்கியுள்ளார். 

வட மேற்கு மாவட்டமான கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  கோலோச்சி வருபவர் கே.பி.முனுசாமி. வன்னியர் இன மக்களை பெரும்பான்மையாக கொண்ட இம்மாவட்டத்தில் தனது இன மக்களின் ஆதரவோடு மூன்று முறை எம்.எல்.ஏவாக இருந்தவர் இவர். இந்த எக்ஸ் எம்.எல்.ஏவும் , மாவட்ட செயலாளரும் ,முன்னாள் மந்திரியுமான கே.பி.முனுசாமி சசிகலா குடும்பத்துக்கு எதிராக முதன்முறையாக பொங்கி எழுந்து கணக்கை துவக்கி வைத்துள்ளார்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கட்சியின்  முக்கிய இடத்தில் இருக்கும் நிர்வாகிகள் , அமைச்சர்கள் , பிரபலங்கள் கூட எதிர் கருத்து கருத்து சொல்லாத நிலையில் சசிகலா  மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சராமாரி குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். கே.பி.எம்.

குறிப்பாக மன்னார்குடியில் நேற்று திவாகரன் பேசிய பேச்சுக்கு தனது நேரடி எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். அதில் திவாகரனின் பேச்சு தனக்கு கொந்தளிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது என்று பகீரங்கமாக கூறியுள்ளார். 

அதிமுக எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு , ஜெயலலிதாவின் கடின உழைப்பால் , லட்சக்கணக்கான  தொண்டர்களால் கட்டமைக்கப்பட்ட கட்சி அதை ஏதோ இவர் தான் கட்டி காப்பாற்றியது போலவும், ஆபத்பாண்டவர் போலும் பேசி வருவது கண்டிக்கத்தக்கது. சசிகலா திவாகரனை கண்டிக்க வேண்டும். இனிமேல் இது போல் பேசாமல் பார்த்துகொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார். 

கட்சியில் செல்வாக்காக இருந்த கே.பி. முனுசாமி அப்போது கூறிய ஒரு கருத்து காரணமாக சசிகலா தரப்பால் தூக்கி எறியப்பட்டார். அதன் பின்னர் அவர் எம்.எல்.ஏவாகவே 2016 வரை காலம் தள்ள வேண்டியதாக போனது. பின்னர் 2016 தேர்தலில் அவரது செல்வாக்கை உணர்ந்த ஜெயலலிதா மீண்டும் வாய்ப்பு கொடுத்தார். ஆனால் வன்னியர்கள் செல்வாக்காக உள்ள மாவட்டத்தில் பாமக, திமுக , அதிமுக என மும்முனை போராட்டத்தில் தோல்வி அடைந்தார். 

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பிரச்சனைக்குரியவர்கள் என கண்டறியப்பட்ட கே.பி.முனுசாமி, பி.எச்.பாண்டியன் போன்றோர் அழைக்கப்பட்டு வேண்டியது செய்து தரப்படும் என்று அறிவித்து அவர்களும் ஒத்துழைப்பு தருவதாக கூறியிருந்தனர்.

தம்பி துரை சசிகலாவுக்கு எதிராக டெல்லியில் காய் நகர்த்தி வந்த நிலையில் ராஜ்ய சபா எம்பியாக்கி டெல்லியில் தம்பிதுரை இடத்தில் அமர்த்துவதாக கே.பி. முனுசாமியிடம் பேசியதாக கூறப்பட்டது. ஆனால் தம்பிதுரை அந்தர் பல்டி அடித்து சசிகலாவின்  தீவிர ஆதரவாளரானதால் கே.பி.முனுசாமிக்கு கொடுத்த வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து தற்போது கே.பி. முனுசாமி கார்டன் தரப்புக்கு எதிராக கொந்தளித்து வெளிப்பட்டுள்ளார். இது மேலும் தொடரும் பி.எச்.பாண்டியன் உள்ளிட்டோர் வெளியேறுவார்கள் என தெரிகிறது.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு