தீபாவுக்கு பெருகும் “முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள்” ஆதரவு - “பி.எச்.பாண்டியனை தொடர்ந்து நயினார் நாகேந்திரன் வர வாய்ப்பு...!”

 
Published : Jan 16, 2017, 10:36 AM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
தீபாவுக்கு பெருகும் “முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள்” ஆதரவு - “பி.எச்.பாண்டியனை தொடர்ந்து நயினார் நாகேந்திரன் வர வாய்ப்பு...!”

சுருக்கம்

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தனது ஆதரவாளர்களின் துணையோடு நாளை புதிய கட்சி தொடங்க உள்ளார் என பரபரப்பாக பேசப்படுகிறது.
முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவு தெரிவித்து ஏராளமான தொண்டர்கள், தினமும் சென்னை தி.நகரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று நேரில் சந்திக்கின்றனர்.

அப்போது,  விரைவில் முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன், அதுவரை பொறுத்திருங்கள் என தொண்டர்கள் மத்தியில் தீபா பேசி வருகிறார். தினமும் தன்னை சந்திக்க வரும் தொண்டர்களிடம் அவர்களின் முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை வாங்குமாறு, அவரது உதவியாளரிடம் உத்தரவிட்டுள்ளார்.


இந்நிலையில், நேற்று முன்தினம் நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகை தினத்தில், ஏராளமான தொண்டர்கள் தீபா வீட்டிற்கு சென்றனர். தொண்டர்கள் மத்தியில் பேசிய தீபா, ‘எம்ஜிஆர் பிறந்த நாளான 17ம் தேதி (நாளை) நான் அரசியலில் ஈடுபடுவது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடுவேன்’கூறினார்.
இதை தொடர்ந்து, நேற்று தீபா வீடு முன்பு ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். அவர்கள் மத்தியில் பேசிய தீபா, ‘நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு செயல்படுவேன். உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப முடிவு எடுப்பேன்.

உங்களுக்காக பணி ஆற்ற காத்திருக்கிறேன்’என்றார். இதனால் புதிய கட்சி தொடங்குவது குறித்து நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பை தீபா வெளியிடுவார் என அவரது ஆதரவாளர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மேலும், தனக்கு ஆதரவு தெரிவிக்கும் முக்கிய தலைவர்களுடன் தீபா ஆலோசனை நடத்தி வருகிறார். இதற்கிடையில் தீபாவுக்கு ஆதரவு கேட்டு ஜெ தீபா அம்மா மாநில இளைஞர் பேரவையினர் நேற்று நடிகர் ஆனந்த்ராஜை சந்தித்தனர்.


ஆனந்த்ராஜ் சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகினார். தற்போது, தீபா ஆதரவாளர்கள் அவரை சந்தித்து பேசியிருப்பதால், அவர் விரைவில் மீண்டும் அரசியலுக்கு வந்து தீபாவுக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என்று பேசப்படுகிறது. ஏற்கனவே முன்னாள் சபாநாயகர் பிஎச்.பாண்டியன், அவரது மகன் மனோஜ் பாண்டியனின் ஆதரவாளர்களும் தீபா அணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக நேற்று அம்பாசமுத்திரத்தில் உள்ள பண்ணை வீட்டில் தனது ஆதரவாளர்ளுடன் பி.எச்.பாண்டியன் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது. இதனால் நாளை அவர் சென்னை வந்து தீபாவுக்கு வெளிப்படையாக தனது ஆதரவை தெரிவிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.


இதேபோல் முன்னாள் திருச்சி எம்எல்ஏ சவுந்தரராஜன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பல்வேறு முன்னாள் எம்எல்ஏக்களும் தீபாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தீபா அணியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் தொண்டர்களை சந்தித்த தீபா, ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்த பச்சை நிற சேலையை அணிந்திருந்தார். மேலும் ஜெயலலிதாவை போல் தன்னை அலங்கரித்திருந்தார். இதை பார்த்த அவரது ஆதரவாளர்கள் ஜெயலலிதாவை பார்ப்பது போல் உள்ளதாக தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு