புரட்சித் தலைவரின் வாழ்க்கை வரலாறு படமாகிறதா? படப்பிடிப்பை தொடங்கி வைத்த எடப்பாடியார்!

Asianet News Tamil  
Published : Nov 10, 2017, 04:10 PM ISTUpdated : Sep 19, 2018, 01:25 AM IST
புரட்சித் தலைவரின் வாழ்க்கை வரலாறு படமாகிறதா? படப்பிடிப்பை தொடங்கி வைத்த எடப்பாடியார்!

சுருக்கம்

MGR biographical film

எம்.ஜி.ஆர். படத்தின் படப்பிடிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். சென்னை, அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர். பிலிம் சிட்டியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. எம்.ஜி.ஆர். என்ற பெயரிலேயே இந்த படம் உருவாகிறது. இந்த படத்தை ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பில் அ.பாலகிருஷ்ணன் தயாரித்து இயக்குகிறார்.

எம்.ஜி.ஆர். படத்துக்கு திரைக்கதை வசனம் எழுதுபவர் செம்பூர் ஜெயராஜ். காமராஜ் திரைப்படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதியவரும் இவரே. இந்த படத்தில் எம்.ஜி-ஆராக சதீஷ்குமார் நடிக்கிறார். பேரறிஞர் அண்ணாவாக இயக்குநர் எஸ்.எஸ். ஸ்டான்லி ஆகியோர் நடிக்கின்றனர்.

பிளாக் பாண்டி, சிங்கம்புலி, முத்துராமன், சௌந்தரராஜா ஆகியோரும் உடன் நடிக்கின்றனர். வி.என்.ஜானகி மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் உருவம் கொண்ட நடிகைகளைத் படக்குழு தேடி வருகிறது.

இந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பை, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திருவள்ளூ பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் வேணுகோபால், அமைச்சர்கள் கே.பாண்டியராஜன், கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியனாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.

PREV
click me!

Recommended Stories

திமுகவின் மாஸ்டர் ப்ளான்..! ஒவ்வொரு வீட்டிற்கும் இன்ப அதிர்ச்சி... லீக்கான முக்கிய சீக்ரெட்..!
அரசு ஊழியர்களுக்கு குஷி.. ரூ.3000 பொங்கல் போனஸ்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு