“எம்.ஜி.ஆருக்கு என் மேல் கோபம்.”. ஸ்டாலின் உடைத்த ரகசியம்..!!

By manimegalai aFirst Published Mar 2, 2022, 9:36 AM IST
Highlights

நான் எம்ஜிஆரின் ரசிகனாகவும்,  விமர்சகனாகவும் இருந்ததாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

தன்னுடைய வாழ்க்கை பிறப்பில் தொடங்கியது முதல் 23 வயது வரை நடந்த அத்தனை சம்பவங்களை தொகுத்து ஒரு வரலாற்று பதிவாக எழுதி 'உங்களில் ஒருவன்' என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளார் தமிழக முதல்- அமைச்சர் முக.ஸ்டாலின். இந்த புத்தகத்தில் பல அரிய தகவல்களை இன்றைய இளம் தலைமுறைகள் அறிந்து கொள்ளும் விதமாக முக.ஸ்டாலின் அவர்கள் பதிவு செய்துள்ளார். தனது இளமைக்கால வாழ்க்கை, கல்லூரி வாழ்க்கை, திரைத்துறை பயணம் அரசியல் போராட்டம் உள்ளிட்ட தகவல்கள் மட்டுமின்றி, தனது  சகோதரர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் தனது பாட்டியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் தனது திருமண புகைப்பட தொகுப்புகளையும் உங்களில் ஒருவன் புத்தகத்தில் முக.ஸ்டாலின் பதிவு செய்துள்ளார்.

இந்த புத்தகத்தில் முக.ஸ்டாலின் அவர்கள் மறைந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றியும் எழுதியிருப்பதுதான் கூடுதல் சிறப்பு... உங்களில் ஒருவன் புத்தகத்தில் 17 வது அத்தியாயத்தில் எம்ஜிஆருக்கு ரசிகனும் விமர்சகனுமாய் என்ற தலைப்பில் எம்ஜிஆரைப் பற்றியும், அவருடன் இருந்த நெருக்கத்தையும் சுவைபட எழுதியுள்ளார். மேலும் கருணாநிதிக்கும் எம்ஜிஆருக்கும் உள்ள நட்பை ஒவ்வொரு வரியிலும் குறிப்பிட்டுள்ளார் ..தனது கோபாலபுரம் வீட்டிற்கு வரும் எம்ஜிஆர் தனது தந்தையிடமும் தன்னிடம் அன்பாகவும் பாசமாகவும் பழகியதையும், எம்ஜிஆர் தன்னிடம் திரைப்படங்கள் குறித்து தான் அதிகமாக பேசுவார் என்றும் குறிப்பாக அவர் நடித்த படங்களை பற்றி தான் அதிகமாக தன்னிடம் கேட்பார் என்றும் ஸ்டாலின் விவரித்துள்ளார்...எம்ஜிஆர் தான் நடித்த படத்தின்  கதை எப்படி ?,தனது நடிப்பு எப்படி இருந்தது என தன்னிடம் துருவித்துருவி கேட்டதாகவும், தானும்  மனதில் பட்டதை தயங்காமல் சொல்லுவேன் என்றும், அவரது படங்களும் நடிப்பும் தனக்கு ரொம்ப பிடிக்கும் என்பதால் எம்ஜிஆர் ரசிகனாகவே தான் மாறியிருந்ததாக தன் புத்தகத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தனது படத்தை பற்றி எம்ஜிஆர்  கேட்பார் என்பதற்காக முதல் நாள் முதல் காட்சி பார்த்து விடுவேன் என்றும், நான் படத்தை பார்த்து இருப்பேன் என்பதை அறிந்து எம்ஜிஆரும் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு படத்தை பற்றிய கருத்தை கேட்டறிவார் என்றும்.. இதனால் தான் எம்ஜிஆரின் படத்தை ரசிக்கும் ரசிகனாக மட்டுமின்றி ஒரு விமர்சகனாகவும் மாறிவிட்டதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.அப்படி கருத்துக் கேட்கும் பொழுது ஒருமுறை எம்ஜிஆரை தான் சார் என்று அழைத்துவிட்டதாகவும், இதனை மனதில் வைத்திருந்த  எம்ஜிஆர் கலைஞரிடம் கூறிவிட்டாராம். 'சார் என்று அழைப்பது நெருக்கத்தை குறைக்கும் சொல்லாகக் கருதிதான் அவர் தன் தந்தையிடம்  கூறியதாக எம்ஜிஆர் தெரிவித்தாராம். இனி அவ்வாறு சொல்ல மாட்டேன் என்று எம்ஜிஆரிடம் கூறியதையடுத்து தனது  தோளில் தட்டிக்கொடுத்து எம்ஜிஆர் சென்றதாக ஸ்டாலின் அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சில நாட்கள் கழித்து முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமி மறைந்தபோது அவரது குடும்பத்துக்கு நிதி வழங்க திமுக தலைவர் கருணாநிதி நிதி திரட்டியிருக்கிறார்.அப்போது  கோபாலபுரம் இளைஞர் திமுக சார்பில் நிதி நிதி திரட்டி வழங்கப்பட்டுள்ளது.எம்ஜிஆர்  படத்தை திரையிட்டு தான் நிதி திரட்டி கொடுத்ததாக ஸ்டாலின் பதிவு செய்துள்ளார்.மேலும் அவர், அப்போது எம்ஜிஆர் நடித்த நாடோடி மன்னன் படத்தை பகல் காட்சியாக ராம் தியேட்டர் திரையிட்டதாகவும், தனது படத்தை எப்போதும் இரவு கட்சியாக மட்டுமே திரையிட  வேண்டும் என எம்ஜிஆர் நினைப்பார். இந்த நிலையில்  நாடோடி மன்னன் திரைப்படத்தை  பகல் காட்சியாக திருடப்படுவதை அறிந்து தன் மீது எம்ஜிஆர் கோபம் அடைந்ததாகவும், ராம்  தியேட்டருக்கு போன் செய்த எம்ஜிஆர் தன்னிடம் கோபமாக பேசியதையும், குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், மறைந்த அமைச்சர் கோவிந்தசாமி அவர்களின் குடும்பத்தினருக்கு நிதி திரட்டுவதற்காக என்று கூறி எம்ஜிஆரை சமாதானம் செய்த கதையை மிக அழகாக எழுதியுள்ளார்..

முரசே முழங்கு நாடகத்தின் நிறைவு விழாவில் கலந்து கொண்டு எம்ஜிஆர் தன்னைக் குறிப்பிட்டு பேசும்போது கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு கட்சி பணிகளில் ஆர்வம் செலுத்து என்று கூறி  வழிகாட்டியதையும், தன்னையும் பெரிய மனிதராக நினைத்து தனது படங்களுக்கான விமர்சனங்களை கேட்டதையும், நினைத்துப் பார்க்கையில் தனிப்பட்ட முறையில் தன்மீது  எம்ஜிஆர் வைத்திருந்த அன்பையும் எங்கள் குடும்பத்தின் மீது வைத்த பாசத்தை நினைத்துப் பார்பதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இந்த காலகட்டத்தில் தான் திராவிட முன்னேற்றக் கழகத்தை விட்டு குறிப்பாக தலைவர் கலைஞரை விட்டு எம்ஜிஆர் பிரிந்துபோனது அன்று மட்டுமல்ல இன்று கூட மர்மமான செய்தியாகவே உள்ளது என ஸ்டாலின் தனது புத்தகத்தில் எம்ஜிஆர் குறித்து பதிவு செய்துள்ளார். முக.ஸ்டாலின் எழுதிய உங்களில் ஒருவன் புத்தகம்.. திமுக உடன் பிறப்புகள் மட்டுமின்றி அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்களையும் கவரும் என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை...

click me!